அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் எதிர்வினை மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி

மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி

எதிர்வினை
இ. அண்ணாமலை

பிழையற்ற அகராதி எதுவும் இல்லை. மொழியின் எல்லையற்ற மாறிக்கொண்டே இருக்கும் இயல்பும் ஒரு காரணம். அகராதி தொகுப்பவரின் பயிற்சிக் குறைவு மற்றொரு காரணம். இக்கால அகராதியைத் தொகுக்கவும் நிகண்டைத் தொகுக்கவும் தேவைப்படும் பயிற்சிகள் வேறுவேறு. தொகுப்பாளரின் மொழிக் கருத்தியல்கள் வேறுவேறு அகராதிகளைத் தரும். பிறமொழிச் சொற்கள் இல்லாத தமிழே தமிழ் என்னும் கருத்தியல் ஒரு வகை அகராதியைத் தரும்; அது தூய தமிழ் அகராதி எனப்படலாம். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்பது மற்றொரு கருத்தியல். அதாவது தமிழ்மொழி பற்றிய ஒரு நம்பிக்கை. இந்த அகராதியின் சொல் தேர்வும் சொல்லிலக்கண விளக்கமும் வேறு மாதிரி இருக்கும். வெப்ஸ்டரின் ஆங்கில அகராதி அமெரிக்காவில் பேசப்பட்ட ஆங்கிலம் தனி மொழி என்ற கருத்தியலைக் கொண்டது; அதன் மூன்றாவது பதிப்பு இலக்கியத்தில் பயன்படுத்திய சொற்கள் மட்டுமே மொழியைச் சார்ந்தவை அல்ல என்ற கருத்தியலைக் கொண்டது.

நான் காலச்சுவடு ஆகஸ்டு இதழில் எழுதிய ஆக்ஸ்போர்டு தமிழ் அகராதியின் விமர்சனம் அகராதி தயாரிக்கப் பயன்படுத்தும் கொள்கைகளைப் பற்றி மிகுதியும் பேசுகிறது. அது அகராதிப் புலவர்களின் கவலை. அகராதியைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு அதைப் பற்றிப் பெரிய அக்கறை இல்லை. அகராதியை வரையறுக்கும் மொழிக் கருத்தியல் அகராதிப் பயன்பாட்டை வேறுபடுத்தும். அதனால் பொதுமக்கள் அதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஆக்ஸ்போர்டு தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதியும் க்ரியா அகராதியைப் போன்றே தற்காலத் தமிழின் அகராதி. இரண்டிலும் சங்ககாலச் சொற்களை எதிர்பார்க்கக் கூடாது. தற்காலம் எந்தக் காலம் என்பது உண்மையான கேள்வி. காலத்தைக் குத்துமதிப்பாகவே எடுத்துக்கொள்ள முடியும். நமது பாட்டி காலத்திலிருந்து – மூன்று தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலிருந்து இன்றுவரை உள்ள காலம் வரை எனக் குத்துமதிப்பாக எடுத்துக்கொள்ளலாம். தமிழில் செய்தித்தாள்கள், நாவல்கள் வந்த காலம் என்றும் சொல்லலாம். அப்படியானால், பாரதியின் தமிழ் தற்காலத் தமிழ் அல்லவா என்ற நியாயமான கேள்வி எழலாம். எடுத்துக்கொண்ட காலத்துக்கு முன்னாலேயே பின் காலத்துக்குரிய கூறுகள் தோன்றும் என்பதுதான் பதில். அந்தக் கூறுகள் எழுதப்பட்ட காலத்து மொழியை வரையறுத்த கூறுகள் என்று சொல்ல முடியாது.

தமிழ் மொழியைக் காலந்தோறும் பலர் உருவாக்குகிறார்கள். தற்காலத் தமிழ் என்னும்போது பொதுமக்கள் உருவாக்கும், பொதுமக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ் என்று சொல்லலாம். இன்று தமிழை உருவாக்குவதில் பள்ளி ஆசிரியர்கள், பாடநூல் ஆசிரியர்கள், அரசின் மொழிக் கொள்கையை வகுப்போர், தமிழ்ப் புலவர்கள், இதழாசிரியர்கள், செய்தித்தாள் ஆசிரியர்கள், சமூக ஊடகத்தில் செய்தி, கருத்துப் பரிமாறுபவர்கள் முதலிய பல குழுவினர் பங்கு பெறுகிறார்கள். கடைசியில் பொதுமக்கள் தங்கள் மொழிப்புழக்கத்தில் சேர்த்துக்கொள்பவையே தற்காலத் தமிழை நிர்ணயிக்கின்றன. எனவே, தற்காலத் தமிழ் அகராதி இந்தத் தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட வேண்டும். தற்காலத் தமிழில் நஞ்சின் பயன்பாடு அதிகமா, விஷத்தின் பயன்பாடு அதிகமா என்பதைத் தரவுகளே முடிவுசெய்யும், கருத்தியல்கள் அல்ல. அகராதித் தொகுப்பாளர் அல்ல.

பொதுமக்களின் தமிழ் இலக்கணமும் (வகுப்பறைக்கு வெளியே தமிழாசிரியர்களின் இலக்கணமும்) மாறியிருக்கிறது. அதை விளக்கப் புது இலக்கணக் கலைச்சொற்களும் தேவை. தொல்காப்பியத்தின் கலைச்சொற்கள் இன்று பயனிழந்து போகலாம். நல்ல போன்ற குறிப்புப் பெயரெச்சங்கள் பெருகிய இன்றைய தமிழில் பெயரடை என்ற புதிய கலைச்சொல் தேவைப்படும்; காயப்போடு, பட்டினிபோடு, கைபோடு முதலிய சொற்கள் பெருகியபின் துணைவினை என்ற கலைச்சொல் தேவைப்படுகிறது. இவற்றில் உள்ள ‘போடு’ என்ற வினையை கீழே போடு என்பதில் உள்ள வினையிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் தேவையைத் தற்காலத் தமிழ் ஏற்படுத்தியிருக்கிறது. தற்காலத் தமிழில் பயன்படுத்தும் தொகைச்சொற்கள் தொல்காப்பியர் வகைப்படுத்தும் ஆறு தொகைகளிலிருந்து அதிகமாக வளர்ந்திருக்கின்றன. ஆறு தொகைகளுக்கான பழைய கலைச்சொற்கள் இன்றைய தமிழுக்குப் போதாது. வடவெழுத்தை நீக்க வேண்டும் என்று இலக்கியத் தமிழுக்குத் தொல்காப்பியம் சொன்ன விதி, அன்றைய கல்வெட்டுத் தமிழுக்குப் பொருந்தாததுபோல, இன்றைய பத்திரிகைத் தமிழுக்கும் பொருந்தாது. அன்றே அரசர்கள் பின்பற்றாத விதியை இன்றைய எழுத்தாளர்கள் போற்ற வேண்டும் என்று நினைப்பது காலத்திற்கு ஒவ்வாதது. இதைப் போன்றவையே மொழிக்கு முதலிலும் இறுதியிலும் என்ன ஒலிகள் / எழுத்துகள் வர வேண்டும் என்னும் விதிகளும்.

அகராதிகளைப் பற்றிய இந்த விவாதம் தற்காலத் தமிழைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் அமையட்டும். தமிழின் எதிர்காலம் அதன் இறந்த காலத்திற்குள் கட்டுப்படாது. இது வாழும் மொழியின் இயற்கை. தமிழ் வாழும் மொழி.

       மின்னஞ்சல்: annamalai38@yahoo.com

     [விவாதம் இத்துடன் நிறைவு பெறுகிறது. (ஆ-ர்)]

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.