அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
தமிழ்ச் சிறுகதையின் யதார்த்த எழுத்தென்பது கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருதப்பட்டது. கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளி குறைந்துவிட்ட இரண்டாயிரத்திற்குப் பிறகும் அத்தகைய கதைகளை யதார்த்தவாதக் கதைகளுக்குள் பொருத்துவதில் சில தயக்கங்கள் ஏற்படுகின்றன. குளித்துமுடித்த நகரப் பெண்ணொருத்தி, உடலில் ஒட்டுத்துணியுமில்லாமல் கண்ணாடி முன்னின்று தன் உடலழகைத் தானே பார்த்து வியந்துகொண்டிருக்கிறாள். தாழிடப்படாத கதவைத் தள்ளிக்கொண்டு திடீரென உள்ளே வந்துவிடும் அவள் அண்ணன் கணநேரத்தில் பார்த்துவிடுகிறான். அவள் உடல் அதிர்ந்து குலுங்குகிறது. இந்த நிகழ்விற்குப் பின்னாலுள்ள இருவரின் அகச்சிக்கல்களையும் யதார்த்த எழுத்தாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு உருவான வாழ்க்கை முற்றிலும் வேறொன்றாக இருக்கிறது. பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றம் இருந்தாலும் மனிதர்கள் பல்வேறு நெருக்கடிகளைத் தினந்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். புறஉலகம் மனிதர்களின் அக உலகத்தின்மீது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. தமிழ்ச் சிறுகதை
