மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 16, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ‘மகளிர் நலன்’ தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மெல்லிய துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘தாய்மாமன் சீர் பெட்டகம்’ வழங்கப்படும் என்பது ஒரு வாக்குறுதி. பெண்களின் திருமண உதவிக்கு எட்டு கிராம் தங்கத்துடன் பட்டுச்சேலை வழங்கப்படும் என்பது மற்றொரு வாக்குறுதி.
இவற்றை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு தனது வரவுசெலவுத் திட்டத்தில் ‘அண்ணன் சீர் திட்டம்’, பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளது.
தமிழர்கள் உறவுப் பிணைப்புகளுக்கு மிகுந்த முதன்மை தருபவர்கள். குறிப்பாக, ‘அம்மா’ எனும் உறவுப் பிணைப்பின் வீரியத்தை அரசியல் களம் வரை காண முடியும். தாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைகள்மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிபவர் தாய்மாமன். தாயின் அன்பும் தந்த
