ஜனவரி 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • அஞ்சலி: எம். வேதசகாய குமார்
      சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார்
    • கண்ணோட்டம்
      நூலும் தடையும்
    • திரை
      நிசப்த நடனம்
    • சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
      பொருநை பக்கங்கள் கு. அழகிரிசாமி
      கவிதை: எழில்
      கட்டுரை: தி.ஜ.ர
      நாட்குறிப்புகள்
      கதை: அவனும் அழுதான்
    • தலையங்கம்
      இனவாதக் கொரோனா
    • கதை
      மகா மாயா
      பனிப்பாறை
      யானையின் சம்பளம்
    • கட்டுரை
      ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?
      கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்
      புத்தனின் உலகில் மொழிகளில்லை
      பாரதி: ‘உயிர்பெற்ற தமிழர் பாட்டு’
      நண்பர், வழிகாட்டி
      மதுரைப்பிள்ளை
      கோ.பெ. கோயில்பிள்ளை
      காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
    • அஞ்சலி: எல். முனுசாமி
      தனித்திருத்தல் என்னும் முடிவிலாப் பயணம்
    • கவிதை
      மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்
    • அஞ்சலி: மரடோனா
      கடவுளின் கை, களிமண் கால்கள்
    • அறிக்கை
      நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2021 கண்ணோட்டம் நூலும் தடையும்

நூலும் தடையும்

கண்ணோட்டம்
செந்தூரன் ஈஸ்வரநாதன்

கண்ணோட்டம்

நூலும் தடையும்

மலேசிய உள்துறை அமைச்சகம் ‘Gay is OK! A Christian Perspective’, ம. நவீனின் ‘பேய்ச்சி’ ஆகிய நூல்களைத் தடைசெய்து உத்தரவிட்டிருக்கிறது. அவற்றை அச்சிடவோ இறக்குமதி செய்யவோ மீண்டும் பதிப்பிக்கவோ வெளியிடவோ விநியோகிக்கவோ கைவசம் வைத்திருக்கவோ முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் பொது ஒழுங்குக்கும் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த, இந்து மதபோதனைகளுக்கு எதிரானதும் முரணானதுமான வாழ்க்கைமுறையைப் பரிந்துரைப்பதாகவும் மலேசிய சமுதாயத்தின் கலாச்சார விழுமிய விதிமுறைகளுக்கு எதிராக ஆபாசம் – ஒழுக்கக் கேடு போன்றவற்றை முன்மொழிவதாகவும் கூறித் தடைசெய்திருக்கிறது.

ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் சாதிய, மதத் துவேசத்தை வளர்க்கவோ நீட்டிக்கவோ வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படவில்லை. சமூகத்தின் குரூர நிலையைக் காட்சிப்படுத்தவும் விமர்சிக்கவும் படைப்பாளர்கள் தமது புனைவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் நோக்கம் சமூக உறவுநிலைகளைப் புரிந்துகொள்வதும் திரட்சியான சமூக வாழ்வியல் கண்ணோட்டங்களை உருவாக்குவதும் ஆகும். அதைக் குறுக்கிப் பார்த்துத் தடைசெய்வது கருத்துவெளிப்பாட்டுக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான நடைமுறை.

‘பேய்ச்சி’யில் நவீன் ஒரு வரலாற்றுக் காலத்தை எழுதுகிறார். அதில் எந்தச் சார்பும் மேற்கொள்ளாமல் புனைவாளராகப் பதிவு செய்கிறார் எனில் ஒரு சமூகத்தின் வரலாறு புனைவின் வழியாகப் பதிவு செய்யப்படுகிறது என்ற அளவில் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக நிகழ்ந்திருப்பது தடை. தடைகள் சமூகத்தின் விரிந்த மனநிலையைக் குறுக்கிச் சீரழிவுகளுக்கே இட்டுச் செல்லும். இவ்வாறான கருத்துமறுப்புச் சீரழிவுகளையே ‘ஆபாசம்’ என்று கூறவேண்டியிருக்கிறது. மாறாக ஒரு வாழ்வு எழுதப்படுவதனாலேயும் பதிவு செய்யப்படுவதனாலேயும் ஆபாசம் ஆகிவிடாது.

ஆபாசம், கெட்டவார்த்தைகள் போன்ற சொல்லாடல்கள் எல்லாத் தடைகளின் போதும் கூடவே உச்சரிக்கப்படுகின்றன. ஆபாசம் என்பதும் மனிதவாழ்வின் அங்கம்தான். அதுவும் சேர்ந்ததாகவே வாழ்வு இருக்கிறது. ஒரு படைப்பாளர் அதைச் சுயதணிக்கையுடன் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

பழைமைவாதத்திலும் பிற்போக்கான மனநிலைகளிலும் தேங்கிக்கிடந்த மலேசிய நவீன இலக்கியத்தில் புதிய அசைவை ஏற்படுத்தியவராக ம. நவீனையும் கருதலாம். நவீன இலக்கியம் குறித்த அவரது பார்வைகள், விமர்சனங்கள், விவாதங்கள், உரையாடல்களினால் சீண்டப்பட்ட பழைமைவாதிகளும் பண்பாட்டுப்போராளிகளும் தடைக்கான விதையைத் தூவியது வெட்கக்கேடானதாகும்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதில் நம்பிக்கையற்ற அரசு, சட்டத்தின் உதவியுடன் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின்மீது தாக்குதல் தொடுத்துள்ளது. இது வருத்தத்திற்கு உரியது. இதற்கு எதிரான வலிய கண்டனக் குரல்களே இக்கொடுஞ்சூழலை எதிர்கொள்ள நவீனுக்குப் பலத்தைத் தரும். மலேசியாவில் அமலிலிருக்கும் இஸ்லாமிய மதச் சட்டங்களால் முடக்கப்பட்டிருக்கும் புனைவை மீட்டெடுப்பதற்கான ஜனநாயகப் பங்கை ஆற்ற வேண்டியது அனைத்து எழுத்தாளர்களின் கடமையாகும்.

மலேசியாவில் மூன்று இனங்களுக்கும் பொதுவான சட்டமாக இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறையிலிருக்கின்றன. அதன்படி பன்மையான கலாச்சாரத்தையும் வாழ்வுமுறையையும் பிரதிபலிக்கும் இலக்கியப் புனைவுகளை இறுக்கமான தூய்மைவாதக் கண்ணோட்டங்களைக் கொண்டு மதிப்பிடுவதும் எடைபோட்டுக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அபத்தமானது. இலக்கியங்கள் மதிப்பீடுகள், வாழ்க்கை பற்றிய உலகக் கண்ணோட்டங்கள் – மனித மனங்களின் இரத்தமும் சதையுமான வாழ்வைப்பற்றி அக்கறைப்படுபவை. அதன் நோக்கம் தூய்மைப்படுத்தப்பட்டவற்றை நோக்கி நகர்வதல்ல என்பதை நவீன இலக்கியப் படைப்பாளிகள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். போலித்தனங்களைக் கிழித்துப்போடுவதும் வாழ்வு குறித்துக் கரிசனையோடு அணுகுவதும்தான்  இலக்கியப் பிரதிகள் ஆற்றும் பங்காக இருக்கும்போது சட்டதிட்டங்கள் ஒரு புனைவின் வலிமையான நோக்கங்களைப் புரிந்துகொண்டு செயற்படும் என்று நம்ப இடமில்லை. மத அடிப்படைவாத அரசுகள் இன்று நேற்று அல்ல காலங்காலமாக இந்த விரோதக் குறுகல் பார்வையுடன்தான் படைப்புகளை அணுகியிருக்கின்றன. அந்த ஜனநாயக விரோத அரசுகளின் வரிசையில் மலேசிய அரசும் இணைந்திருப்பது வருத்தத்திற்கானது.

பல்முனைகளில் இருந்து நாவலின் மேல் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் தனது ‘பேய்ச்சி’ நாவலிலிருந்து ஒரு வரியைக்கூட மாற்றவோ நீக்கவோ மாட்டேன் என்று அறிவித்திருக்கும் நவீனுக்குப் பாராட்டுகள்.இந்த நூலுக்கு உலகத் தமிழ்ச் சூழல் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் ஆதரவு நிலைப்பாடுகளை மலேசிய அரசு கவனத்தில் கொண்டு நூல்மீதான தடை முடிவை மீள்பரிசோதனை செய்ய வேண்டும் என அரசிடம் முறையிடப்போவதாக நவீன் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான மத அடிப்படைச் சட்டங்களைச் சிரமேற்றிருக்கும் அரசுகள் தாம் மேற்கொண்ட தூய்மைவாதத் தீர்மானங்கள், சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோ விலக்களிப்பதோ மிக அபூர்வமான நடைமுறை. அவ்வாறு நிகழுமெனில் அது மலேசிய அரசுக்குப் பெருமை; கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பு.

- செந்தூரன் ஈஸ்வரநாதன்

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.