கடவுளின் கை, களிமண் கால்கள்
அஞ்சலி: மரடோனா
கடவுளின் கை, களிமண் கால்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
ஓவியம்: மணிவண்ணன்
‘கடவுளின் கை’ என்னவென்று உதைப்பந்தாட்டத்தை அரைத்தூக்கத்தில் பின்பற்றுகிறவர்களுக்கும் தெரியும்; இவை சமீபத்தில் மறைந்துபோன டீயோகோ மரடோனா சொன்ன வார்த்தைகள். இதன் பின்னணி: 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான பந்தயத்தில் திருட்டுத்தனமாகக் கையினால் தட்டிவிட்டு வலைக்குள் பந்தை விழச்செய்தவர் மரடோனா. ஆட்ட முடிவில் நடந்த நேர்காணலில் ‘இது முறைகேடான செயல் அல்லவா’ என்று ஆங்கில ஊடகவியலாளர்கள் கொதித்தபோது இன்னும் க