ஊடக மொழியாளுமையர்

மொழி, தகவல்தொடர்பின் முதன்மை ஊடகம். பொது மொழியைக் காட்டிலும் ஊடக மொழியின் செயற்பாட்டு நோக்கம் வலுவானது. இது படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், மனவுணர்வுகள் முதலானவற்றை வாசகர்க்குக் கடத்திச் சமூகத்தைக் கட்டமைக்கும் சக்தி வாய்ந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை உட்கொண்டு கலாச்சாரத் தாவல்களுக்கு வாசகரை ஆயத்தம் செய்வதில் இவ்வெழுத்து ஊடக மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மொழிப் புனிதத்திற்கு அப்பால் ஊடகம் அதன் மொழி வகைமையைத் தேர்வுசெய்ய வேண்டும். இதற்கான தனித் தோரணையை ஊடக மொழி வகுத்துக்கொண்டால் மட்டுமே அது கடத்தும் தகவல் வாசகர்க்கு அர்த்தமாகும்; புதிய சமூகச் சூழல்கள் உருவாகும்.
அரவிந்தன், ஓர் ஊடகவியலாளராக எழுத்து ஊடகத்திற்கான மொழி வகைமையிலும் நடையிலும் அதன் தொனியிலும் தனிக் கவனம் செலுத்தும் பண்புடையவர். ஊடகத்திற்கான பிரதியைத் தேர்வு செய்யும்போது இவற்றில் எந்த
