ஈரான் போர் எங்கே நிற்கிறது இந்தியா?
பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா அயல்நாடுகளுடன் கொண்டிருந்த உறவை ‘அணி சேராக் கொள்கை’ வழிநடத்தியது. இது காலனியத்திற்கு எதிரானது. எந்த வல்லரசின் பக்கமும் சாராமல் நிற்பது. தாராளமயத்தின் காலத்தில் இந்தியாவின் கொள்கை மாறியது. அது சுயேச்சையான அயலுறவுக் கொள்கை (strategic autonomy) எனப்பட்டது. நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல், அதே வேளையில் நாட்டின் நலனுக்காக நீக்குப்போக்குடன் நடந்துகொள்வது என்று இதற்கு உத்தேசமாகப் பொருள் சொல்லலாம். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம், ரஷ்யாவுடன் ஆயுத பேரம், சீனாவிடம் கொள்முதல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரிசெய்ய இந்தக் கொள்கை உதவியது. எனில், இது மையமாக நின்றுகொள்வதோ, நாட்டைத் தனிமைப்படுத்திக்கொள்வதோ அல்ல. 1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோதும், 2003இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோதும், இந்தியா பாதிக்கப்பட்ட நாடுகளின் பக்கம்தான் நின்றது. ஆனால் இந்நாளில் இந்தியா கடைப்பிடித்து வரும் அயலுறவுக் கொள்கைக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. முக்கியமான சர்வதேச நிகழ்வுகளின் போது இந்தியா
