“தமிழர் மெய்யியல் பன்முகமானது”

படங்கள்: கண்மணி
தமிழ்ச் சிந்தனைச் சூழலில் எஸ்.வி. ராஜதுரை, ந. முத்துமோகன் முதலானவர்கள் தத்துவம், சிந்தனைக் கோட்பாடு போன்றவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். அந்த வரிசையில் இன்று ஊக்கத்துடன் இயங்கி வருபவர் இரா. முரளி. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகளாவிய இளந்தலைமுறையினரிடம் தத்துவத்தைக் கொண்டு சேர்த்துவருகிறார்.
மதுரைக் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘நீலகேசி’, ‘இருத்தலியம்’, ‘ஹேபர்மாஸ்’, ‘தியோடர் அதோர்னோ’ ஆகிய நூல்களின் ஆசிரியர். கணையாழி உள்ளிட்ட இதழ்களில் புனைவாக்கங்களையும் எழுதியிருக்கிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்தியச் செயலாளராக இருந்தவர்.
