நீட் என்னும் வன்கொடுமை

Courtesy: Huffpost
இந்தியா முழுக்க நீட் தேர்வு தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலத்தில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்த, விழிப்புணர்வையும் அச்சத்தையும் அரசாங்கம் உட்படப் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் வெளிப்படுத்தின. நீட் தேர்வு மோசமான சூழ்நிலையை உருவாக்கும்; கல்வி அமைப்பையே சிதைக்கும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எந்த வகையான போராட்டத்திற்கும் பதிலில்லாமல் நீட் தேர்வு மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கும் மிகச்சிறந்த கட்டமைப்புக் கொண்ட தமிழ்நாட்டில், நீட்தேர்வு முறை ஏற்ப
