ஜூன் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூன் 2026
    • கட்டுரை
      விஜய் எனும் புலப்பாடு
      மறைந்த மதச்சார்பின்மை: தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள்
      ஈரான் போர் எங்கே நிற்கிறது இந்தியா?
      ஊடக மொழியாளுமையர்
      நீட் என்னும் வன்கொடுமை
      புவியின் சாட்சி
    • அஞ்சலி: ரகு ராய் (1938 & 2026)
      காலத்தைப் படம்பிடித்தவர்
    • பத்தி இன்றும் என்றும் - 2
      அரசியல் ஜூகல்பந்தி: ஏழு அரசியல் கூட்டாளிகள்
    • நேர்காணல்: இரா. முரளி
      “தமிழர் மெய்யியல் பன்முகமானது”
    • அஞ்சலி: இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026)
      நடமாடும் ‘கூகுள்’
    • கற்றனைத்தூறும்-17
      எலிப்பந்தயமோ கல்வி?
    • பதிவு
      அரவிந்தன்:காலச்சுவடுக்குப் பேரிழப்பு
      தன்யனானவர்
    • அஞ்சலி: துரை. சீனிச்சாமி (1944 -2026)
      என் குருநாதர்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கதைகள்
      நரகத்தில் போர்ஹெஸ்
    • முன்னுரை
      மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள்
    • கவிதைகள்
      கவிதா முரளிதரன் கவிதைகள்
    • தலையங்கம்
      ‘தற்குறி’களின் வருகை அல்லது இருதுருவ அரசியலின் வீழ்ச்சி
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2026 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

தமிழின் சிறந்த அரசியல் நாவல்களில் ஒன்றான ‘பயணம்’ நாவலை எழுதிய அரவிந்தன் மறைவை ஒட்டிக் காலச்சுவடில் வெளியான ‘அரவிந்தன் நினைவுகள்’ பகுதியில் எழுவர் அரவிந்தனின் எழுத்தாளுமை குறித்தும் அவரின் தனிப்பட்ட பண்புகள் குறித்தும் சிறப்பான முறையில் நினைவு கூர்ந்துள்ளார்கள். அவர் இதழியலுக்கு வந்த 25- 30 ஆண்டுகளை முன்னிட்டோ அல்லது அவருக்கு 60 வயது நிறைவை ஒட்டிய சிறப்பு மலராக வந்திருக்க வேண்டிய கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகளாக மாறியிருப்பது துயரம்தான். 

சுந்தர ராமசாமியின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஒன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை முன்வைத்து பொன்முகலி எழுதியுள்ள ‘இன்றும் பொருந்தும் ஆக்கம்’ என்ற கட்டுரை நாவல் வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தபின்னும் எப்படி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். நாவலில் இருக்கும் சம்பவங்கள் சமகாலத்தில் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 
அரசியல், தத்துவக் கோட்பாடு மற்றும் சினிமா சார்ந்து அதிக கட்டுரைகள் எழுதியுள்ள (நான் பார்த்த அல்லது படித்த அளவில்) ராஜன் குறை  ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை முன்வைத்து ‘நாவலை வாசிப்பது எப்படி?’ என்ற கட்டுரை மற்றொன்றாகும். இந்த நாவல் எதனால் சிறந்த நாவலாக இருக்கிறது என்பதை மிக விரிவாகவும் ஆழமாகவும் கூர்மையாகவும் எழுதியுள்ளார். 

சா.ரு. மணிவில்லன்
சென்னை

***

சித்திரவதைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை ‘சாத்தான்குளம் தீர்ப்பு’ குறித்தான தலையங்கத்தில் சரியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு. அரவிந்தன் மாபெரும் இழப்பு; இதழியலுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும்தான். நான்கில் ஒரு பங்கு பக்கத்தில் (20/84) அரவிந்தன் நினைவலைகள் என்றும் மறக்க முடியாத பதிவுகள். ‘மூடிய சாளரம்’  கதை! ‘பணம்’ மட்டுமே எல்லாம் என நினைக்கும் உறவுகள், மக்கள் மத்தியில் வாழ்வில் முன்னேறலாம் என்பதை குட்டிமணி மூலம் தலையில் குட்டியுள்ளார் எம். கோபாலகிருஷ்ணன். கு. அழகிரிசாமியின் டைரி குறிப்புகள், நாட்குறிப்பு எழுதுவதால் என்ன பயன் என்பதை ‘காதலரின் நாட்குறிப்’பாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு. 

சீனி. மணி
மின்னஞ்சல் வழி

***

‘அகலாத நினைவு சொல்லும் நன்றி’ என்கிற தலைப்பில் மறைந்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே பற்றி ஜான் சுந்தர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை ரசிக்க வைத்தது. தனது சகோதரி லதா பாட விரும்பாத பாடல்களையெல்லாம் தனது பாடல்களாக எடுத்துக்கொண்டு, எல்லாத் தரப்பு ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர். ஹிந்திப் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருந்த தமிழர்களை மட்டுமல்லாது, ஹிந்திக்காரர்களையும் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்க வைத்த இளையராஜாவின் இசையில் அதிகமாகப் பாடியவர். கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோலத் தமிழைச் சில இடங்களில் சிதைத்தாலும் அதனையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமூகம். வேறு எந்த மாநிலங்களிலும் இதை ஏற்பார்களா? அல்லது ஏற்றுக் கொண்டிருப்பார்களா? 

என். பாபு அருள் ஜோஷி
களக்காடு

***

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.