விஜய் எனும் புலப்பாடு
“சினிமாதான் இங்கிலாந்தின் சிந்தையாய் இருக்கப்போகிறது. தேசத்தின் மனசாட்சியை, தேசத்தின் இலட்சியங்களை, எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் நடத்தை விதிகளை இனி சினிமாவே தீர்மானிக்கும்,” என்று 1914இல் சினிமா குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் பெர்னாட் ஷா கூறியது இங்கிலாந்தில் உண்மையாகவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தீர்க்கதரிசனமாகிவிட்டது. இதற்கு முன்பிருந்த எந்தவொரு கலை வடிவத்தை விடவும் சமூகம், அரசியல்மீது சினிமா செலுத்தக்கூடிய ஆதிக்கம் அசாதாரணமானதாக இருக்கும் என்பதை பெர்னாட் ஷா ஊகித்திருந்தார். அதன் காரணமாகவே சினிமா என்ற கலை முழுக்க முழுக்க வர்த்தகமயமாகிவிடக் கூடாது என்றும் அக்கட்டுரையில் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் அரசியலைத் தீர்மானிப்பதில் சினிமா வகிக்கும் பங்கு தனித்துவமானது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணக் கிடைக்காதது. ஆந்திராவில்கூட என்.டி. ராமராவிற்குப் பிறகு வேறு எந்தத் திரை ஆளுமையும் ஆட்சியைக் கைப்பற்றுமளவிற்கு உருவாகவில்லை. சினிமாக் கவர்ச்சி கோலோச்சும் தமிழ்நாட்டில்கூட விஜய் தனித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று ஒருவரும் நினைக்கவில்லை, கணிக
