புவியின் சாட்சி

Courtesy: David Levene / The Guardian
இயற்கை உலகே ஆகச்சிறந்த ஈர்ப்பூட்டும் ஒன்றாகவும்,
அழகுக்கு ஆகப்பெரிய ஊற்றுக்கண்ணாகவும், அறிவார்வம்
ஊட்டுவதாகவும் உள்ளது. வாழ்க்கையைப் பொருளுடைய
வாழ்வாக்கும் ஆகப்பெரிய உயிர்ப்பு அடிப்படை.
- ‘சர்’ டேவிட் அட்டன்பரோ
பிரித்தானியராகிய சர் டேவிட் அட்டன்பரோ, மே 8, 2026 அன்று புகழார்ந்த அகவை 100ஐ எட்டிவிட்டார். இயற்கையில் உயிரினங்களின் காணற்கரிய வாழ்க்கைக் காட்சிகளை ஒளிபரப்பிப் புகழீட்டியவர். அவரின் பணியால் உலகில் மாந்தர்கள் இயற்கையை எப்படி உணர்கின்றார்கள் என்பது அடிப்படையாகவே மாறிவிட்டது. அவர் வாழ்வு முழுவதும் அடிப்படையில் அரிய இயற்க
