
ஓமைக்ரானை வரவேற்கலாமா?
நான் முடிதிருத்திக் கொள்ளும் கடையில் மாணவர் ஒருவர் பகுதிநேரமாக வேலை செய்கிறார். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்பவர். அவர் கேட்டார், ‘இந்த முறையும் ஆன்லைன் எக்ஸாம் வந்திரும்ல சார்?’ ‘இல்லப்பா. நேரடித் தேர்வுதான்னு அரசு அறிவிச்சுடுச்சே’ என்றேன். ‘ஒமைக்ரான் வந்துக்கிட்டு இருக்குதுல்ல சார். தமிழ்நாட்டுக்கும் வந்துரும். வந்துட்டா எக்ஸாம ஆன்லைனுக்கு மாத்திருவாங்கன்னு எல்லாரும் பேசிக்கறாங்க சார்.’ அந்த மாணவரின் முகத்தில் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் கூடியிருந்தன. அவை ஒரு மாணவருக்கு மட்டும் உரியதல்ல. மாணவ சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. மாணவ சமுதாயத்தின் மகிழ்ச்சி. ‘தேர்வுக்காக ஒமைக்ரான வரவேற்கலாமா தம்பி?’ என்று கேட்க நினைத்ததை அடக்கிக்கொண்டேன்.
இணையத் தேர்வுதான் வேண்டும் என்று மாணவர்கள் போராடினார்கள். பெரும்பாலும் கலைக்கல்லூரி மாணவர்கள்