
உள்ஒதுக்கீடு 10.5% உயர்நீதிமன்றச் செய்தி என்ன?
2021 நவம்பர் முதல்நாள் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, வன்னிய குல சத்திரியர் என்ற சாதியின் கீழ் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பாலி, அக்னி குல சத்ரியா உட்பட ஏழு பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு 10.5% அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியது. “அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது” எனத் தெரிவித்தது.
மதுரை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுக்கும் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் வைக்கும் வாதம் என்னவெனில், “பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு (3.5%), தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள அருந்ததியர