
கடைசிப் பக்கங்கள்
புத்தகம் பற்றி எழுதப்போகிறேன். முழுப் புத்தகம் பற்றி அல்ல. புத்தகங்களில் இருக்கும் கடைசிப் பக்கங்கள் பற்றி. கடைசிப் பக்கங்கள் என்றால் சுஜாதா கணையாழியில் எழுதிய உல்லாசமான, ஆனால் உள்ளீடற்ற பத்தி அல்ல. கல்வித் தகைமையான நூல்களில் இறுதியில் காணப்படும் பொருள் பதிகம். Index. இந்த ஆங்கில வார்த்தைக்கு ஒரு தமிழ் அகராதி தந்த தமிழ்ச் சொல் அனுக்கிரமணி. இந்தப் பதத்தை எல்லாரும் விளங்கும்படித் தமிழ்ப்படுத்தினால் ஒரு நூலிலிருக்கும் சொற்கள், பெயர்கள் ஆகியவற்றின் அகரவரிசைப் பட்டியல். இது பொதுவாக அறிவுசார்ந்த ஒரு புத்தகத்தின் முடிவில் காணப்படுவது. இவை இரண்டுவகையானவை. ஒன்று நூலில் பதியப்பட்ட நபர்களின் பெயர்கள் காணப்படும் பக்கங்களின் எண்ணைத் தரும்; மற்றது நூலின் முக்கிய கருத்துகள் எங்கே எல்லாம் பரவிக்கிடக்கின்றன என்ற தகவலைத் தெரிவிக்கும். சில இறையியல் சார் நூல்களில் வேதவசனங்கள் காணப்படும