
சற்று முன்பு நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
1
சற்று முன்பு
நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?
கல் இறுகுவதையும் நீர் உறைவதையும் பற்றி
நெருப்பு எரிவதைப் பற்றி
மயில்கள் தோகை விரிப்பதையும் பற்றி
உலகின் முதல் விடியல் எதுபோல இருந்தது என்பதைப் பற்றி
வாய்க்குள்ளிட்ட நொடியில் இனிப்புப் பழம் ஏன் கசக்கிறது என்பதையும் பற்றி
நள்ளிரவுக்கு நாலே நிமிடங்களிருக்கும்போது
அவியாத தணல்போல ஆகாயம் கனன்று எரிவதைப் பற்றி
பூமி சிறுகச்சிறுக மணலாக உருமாறுவதைப் பற்றி
மூங்கில் கொத்துகளின் நிழல் சாம்பலாக மாறுவதைப் பற்றி.
2
இல்லை,
இப்போது என்னால் எதையும் நினைவுகூர முடியவில்லை.
ஒரு வினாடிக்கு முன்பு
நீ என்னைக் காதலிப்பதாகச் சொன்னாயா?
அந்த நேசம் மனித குலத்துக்கோ
கைவிடப்பட்ட குழந்தைகளுக்கோ
அல்லது<br