
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
க்ரியா தமிழ் அகராதியில் கடனுக்கு என்னும் சொல்லுக்கு “எந்தவித ஈடுபாடும் இல்லாமல் வேறும் கடமை” என்னும் பொருள் உள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்ட சொற்றொடர் “வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் கடனுக்கு வந்துவிட்டுப் போனார்கள்” என்பது. க்ரியாவிற்கு முந்திய அகராதிகளில் குறிப்பாகத் தமிழ் லெக்சிகனில் கடனுக்கு என்னும் சொல் தனியாக இல்லை.
தமிழ் லெக்சிகன் ‘கடன் கழித்தல்’ என்ற சொற்றொடர்க்கு முதற்பொருளாக கடமையைச் செய்தல் என்று கூறும். இச்சொல் வில்லிபாரதத்தில் இதே பொருளில் வருகிறது. இச்சொல்லுக்கு மத ஆசாரங்களுக்குரிய கிரியைகள் செய்தல் என்னும் பொருளையும் லெக்சிகன் தருகிறது. ‘மனமின்றிச் செய்தல்’ என்னும் பொருளும் உண்டு. லெக்சிகன் இது மேற்கு வழக்கு என்றும் குறிப்பிடுகிறது.
தமிழ் லெக்சிகனில் ‘இல்லாத கடனுக்கு’ என்ற சொல்