
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
கட்டுரை
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
மு. இராமனாதன்
ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர்காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதிவரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால் திருத்தணிமுதல் தென்குமரிவரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை.
பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற் பெயர்(first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று.