பாம்புப் பிடாரனின் கதை
பாம்புப் பிடாரனின் கதை
ஒடியமொழிக் கதை
சந்திரசேகர் ரத்
ஆங்கிலம்வழி தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி
ஓவியம்: மணிவண்ணன்
அவனுடைய வித்தை புதிரானது, ரகசியமானது, சாதாரணமானவர்களுக்குக் கைவராதது. சொல்லப்போனால், பாம்புப் பிடாரர்களில் மிகச் சிலரே அந்தத் திறமையைப் பெற்றிருந்தனர். பாம்புகளைப் பிடித்து வித்தை காட்டும் நுட்பத்தைக் கைவரப் பெற்றிருந்த ஜம்புரா போன்ற சிலரால் மட்டுமே மாயாஜாலங்களை நிகழ்த்த முடிந்தது. அந்த ஜாலங்களை நம்ப வேண்டுமானால் நீங்கள் சூதுவாது புரியாதவர்களாகவோ அ