உன்னால்தான் எல்லாம்
கட்டுரை
உன்னால்தான் எல்லாம்
ஜி. குப்புசாமி
பாலூ என்று உன்னை நான் அழைப்பதற்கு, நீயும் நானும் நேரில் அறிந்துகொண்ட நண்பர்களோ உறவுக்காரர்களோ அல்ல. ஆனால் உன்னை எனக்கு 69ம் வருடத்திலிருந்து பழக்கம். என்னைவிடப் பதினைந்து வயது மூத்த, உடன்பிறக்காத சகோதரன் நீ. உன்னை அயலார்போல செயற்கை மரியாதையோடு விளிக்க என்னால் ஆகாது. என்னில் ஒரு பகுதியாக நிறைந்திருக்கும் நீ எப்போதும் என் பேச்சில் வரும்போது ஏகவசனத்தில்தான் வருவாய். அதுதான் நமக்கு இயல்பாக இருக்கமுடியும். இப்போது என்னைவிட்டு, (’எங்களைவிட்டு’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என மற்றவர்கள் சொல்லலாம்; ஆனால் நீ எனக