அனுபவங்களும் பொறுப்புகளும்
அனுபவங்களும் பொறுப்புகளும்
மா
(வளர் இளம்பருவ கல்வி ஆலோசகர்)
பாலியல் சவால்களைப் பாலியல் இச்சை, பாலியல் அத்துமீறல் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறேன். ஏனெனில் வளர்இளம் பருவத்தில் பாலியல் உணர்வுகளைக் கையாள்வதற்கும் வயதுவந்தோரின் பாலியல் உணர்வுகளைக் கையாள்வதற்கும் வேறுபாடு உள்ளது. முதுகலை உளவியல் துறை மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். மாணவர்களிடம் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பாலியல் இச்சை ஒன்றையும் பாலியல் அத்துமீறல் ஒன்றையும் குறிப்பிடச் சொன்னேன். சுவாரஸ்யமூட்டும் விதமாக மாணவிகள் அனைவரும் பாலியல் அத்துமீறல்களையும் மாணவர்கள் எல்லோரும் பாலியல் இச்சைகளையும