எப்போதாவது நீர்வரும் ஆறு
1.
எப்போதாவது நீர்வரும் ஆற்றின் ஒரு பகுதி
மைதானமாகிவிட்டது
இளைஞர்கள் இறகுப் பந்து விளையாடுகிறார்கள்
முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்
எப்போதாவது நீர்வரும் ஆற்றின்
மணலைக்
குத்தகைதாரர்கள் கொண்டுபோய்விட்டார்கள்
நாணல் அடர்ந்திருந்த மையத் திட்டு
வேலிக் காடாகிவிட்டது
மயில்களும் காடைகளும்
வெருவுப் பூனைகளும்கூட
வந்துவிட்டன
அந்தக் காட்டுக்குள் முயல்களைத் தேடி
வேட்டைக்காரர்கள் இறங்கிவிட்டார்கள்
தூர் தட்டிவிட்ட கரையோர நந்தவனத்துக் கிணற்றில்
துருவேறிய வாளிகள் தலைகவிழ்ந்து கிடக்கின்றன
கரைகடக்கப் பிரயாசைப்பட்ட மாட்டு வண்டிகள்
ஆற்றைப் பாதையாக்கிவிட்டன
கார்களும் வேன்களும்கூட
அதில் கரையேறிப் பழகிவிட்டன
எப்போதாவது நீர்வரும் ஆறு