வாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும்
வாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும் என்கிறான் ப்யூகோவ்ஸ்கி
வாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும்
என்றால் எப்படி?
என் சிநேகிதனோடு பேசும்போது
செத்துப்போன மீன்களைப்போல
கண்கள் திறந்தபடி
வார்த்தைகள் மிதக்கின்றன
இப்போதெல்லாம்
என் ஆன்மாவின் ஒரு இருள்புள்ளி
பருத்துக்கொண்டே போகிறது
தினம்தினம்
சில நல்லெண்ணங்களை
தனக்கு இரையாக்கியபடி
நடைபாதை ஓரத்தின் குட்டிப்பூக்கள்
எதிர்பாராத குளிரால்
அற்பாயுசில் போயேவிட்டன
திரும்ப வசந்தம் வந்தாலும்
பூக்கப்போவதெல்லாம் வேறுபூக்கள்
வாழ்வில் சாவைத் தோற்கடிக்க முடியும்
என்றால் எப்படி?
ஏன் ப்யூகோவ்ஸ்கி
இத்துப்போன ஒரு பலூனை
இ