சர்வதேசப் பரவலும் பூட்டப்படலும்
கட்டுரை
சர்வதேசப் பரவலும் பூட்டப்படலும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
தொற்றுநோய்க் கிருமியின் திடீர்ப் பிரசன்னம் பற்றியும் அது சீனாவில் தான் உருவாகும் என்று ஆருடமாகச் சொன்ன இரண்டு நாவல்கள் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். இந்த இரு கதைப் புத்தகங்களும் சீனாவில் ஒரு நச்சுத்தன்மையான நோய் தோன்றும் என்று கடவுள் கனவில் எழுந்தருளி வெளிப்படுத்தினது போல் விபரித்திருந்தன. ஒன்று, 1981இல் வெளிவந்த ‘The Eyes of Darkness’ என்ற இந்நாவலை எழுதியவர் அமெரிக்கரான Dean Koontz. இக் கதையில் கிருமித் தொற்று ஆரம்பமான நகரம்-நம்பமாட்டீர்கள் - இன