மலையாள சினிமாவின் தமிழ் ரசிகர்
கிளுகிளு தலைப்புகளில் ஐ.வி.சசியும் பரதனுமெல்லாம் ‘தமிழ்ப்படுத்த’ப்பட்டு ஓடிய மலையாள சினிமாக்களின் காலத்திற்குப் பிறகு, தமிழ் ரசிகர்களிடையே மலையாள சினிமா பற்றிய பேச்சு சமீபமாக மீண்டும் அதிகரித்திருக்கிறது; குறிப்பாகத் தமிழ் இணைய வெளியில். (இடையில் தோன்றி மறைந்த ஷகீலா, ரேஷ்மா மலையாள வசந்தத்தைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது ஞாபகம் வந்தாலும் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது என்பதால் நானே எடிட் செய்துவிட்டேன்.) திலீஷ் போத்தனும் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ராஜீவ் ரவியுமெல்லாம் ஏன் தமிழ் சினிமாவில் உருவாகவில்லை என்பது தமிழ் இளைய விமர்சகர்களின் விசனங்களில் ஒன்று. இன்னும் சற்றுத் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் சனல்குமார் சசிதரனையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
‘சாப்பக்குரிசு’, ‘ட்ராஃபிக்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’ போன்ற படங்களுடன் மலையாள வெகுஜன சினிமாவின் புதிய அல