முதல் சம்பளம்
வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒருநாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்து
கொண்டிருக்கிறேன். சம்பளத்துக்கு வேலை; என்ன வேலை என்றாலும் பரவாயில்லை; தோட்ட வேலை; சூப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை; உணவ கத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை; மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம். அதுவும் கணக்கு எழுதும் வேலை எனக்குத் தேவையே இல்லை. வாழ்நாள் முழுக்க அதைத்தானே செய்தேன்!
சூப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலைக்கு முயற்சி செய்தேன். வாடிக்கை யாளர்கள் சாமான்களை வண்டிலிலே வைத்துத் தள்ளிச் சென்று காரிலே ஏற்றி வண்டிலை விட்டுவிட்டுப் போவார்கள். அவற்றைச் சேகரித்து சூப்பர் மார்க்கெட் உள்ளே கொண்டு போய் நிறுத்தவேண்டும். அதைக் கெடுத்தவர் புலம்பெயர்ந்த தமிழர்தான். அவர் அங்கே 30 வருடமாகச் சேவை செய்கிறாராம். 20 வண்டில்களை