வயல் நிறையச் சொற்கள்
ஆத்மாநாம் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விருது விழா செப்டம்பர் 30ஆம் தேதி மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நிகழ்ந்தது. ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’, பாரதியின் ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ ஆகிய பாடல்களைப் பாடித் தமிழிசையுடன் ரவிசுப்ரமணியன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ‘ஆத்மாநாம் அறக்கட்டளை’யின் தமிழ்க் கவிதை விருதுக்கான தேர்வுக்குழு அறிக்கையை க. மோகனரங்கனும் மொழிபெயர்ப்புக் கவிதை விருதுக்கான ஆர். சிவகுமாரின் தேர்வுக்குழு அறிக்கையைக் கிருஷ்ண பிரபுவும் வாசித்தனர். எழுத்தாளர் பெருமாள்முருகன் தனது தலைமை உரையில் ‘ஆத்மாநாம் அறக்கட்டளையின் முன்னெடுப்பு தமிழ்ச் சூழலில் ஒரு கலாச்சார அடையாளமாக மாறிக்கொண்டு வருகிறது,’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.
விருதுபெறும் கவிஞர் அனாரின்