சப்தபர்ணி மலர்கள்
இரவு உறக்கம் பிடிக்காமல் நீண்ட நேரம் புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். சீரான கால இடைவெளிகளில் ஒலித்த “ச்ச்ச்ச்ச்ச்” என்ற பல்லி சொல்லும் சத்தம் அவளுக்குச் சிறு முத்தங்களின் ஓசையை நினைவூட்டியது. தொலைவில் “க்கொல்ல்ல்ல்” என்ற நாய்களின் கூட்டுக் குரைப்பு. அடிவயிற்றில் பயம் படர்ந்தது. பக்கத்தில், இரவின் மாறாத பின்னணியாகக் கணவனின் மெல்லிய குறட்டை யொலி. அவளுக்கு அது உவக்கவில்லை. இன்னும் பழகாத புது இடம். மனிதர்கள், இடங்கள், பாஷை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே புதியன. என்ன நடக்கிறது என்று யோசிக்கயோசிக்க தன்னையறியாமல் கண்ணீர் பொங்கிக் கன்னங்களில் வழிந்தது. எப்போது உறங்கினாள் என்று தெரியாது, கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழித்தாள். வேலைக்காரம்மா வந்திருந்தாள். இரவின் தூக்கமின்மை கண்களில் லேசான எரிச்சலாய்த் தங்கியிருந்தது. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொட