நியூயார்க்கில் எருமைக்காம்புகள்
நியூயார்க்கில் எருமைக்காம்புகள்
முப்பதாண்டுகளுக்கும் முன்நடந்தது
ஏதோ நேற்று நடந்தது போலிருக்கிறது
இன்று எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
சொறிநாயைப் பிடிப்பதுபோல்
அவளை அடித்திழுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
அது ஒரு செவ்வாய்க்கிழமை மதியம்
கணிதப்புலி மனிதப்புலியான கதையது
வெள்ளிக்கிழமை இரவில்
என் தங்கைக்கும் அதேதான் நிகழ்ந்தது
தேடிப்போன புலியண்ணனும்
உட்குலைந்த என் அப்பாவும்
எங்கிருக்கிறார்களோ யாரறிவார்
பல்கலைக்கழகம் அப்போது
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய
அணு உலையாயிருந்தது
படித்தால்தான் இங்கிருந்து தப்பிக்கலாம்
இங்கிலாந்தோ கனடாவோ ஃபிரான்ஸோ போய்விடு
குடிநிலத்திலேயே மரிப்பதும் நீடிப்பதும்
எல்லாருக்கும் முடியாது
புலம்பெயர்