மானுடக் கனவும் பண்பாட்டின் உச்சமும்
கார்ல் மார்க்ஸும் பிரடெரிக் எங்கெல்ஸும் சேர்ந்து எழுதிய கம்யூனிச அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகள் நிறைவடைய ஒரு சில மாதங்களே இருக்கின்றன. மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. உலக வரலாற்றுப் போக்கின் மீது பெரும் செல்வாக்குச் செலுத்திய 10 நூல்களின் பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் இந்த இரண்டு நூல்களுமே இடம்பெறும். மார்க்ஸின் சிந்தனையால் உந்தப்பட்ட லெனின் தலைமையில் நடந்த ரஷியப் புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நூறாண்டு காலத்தில் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு, குறிப்பாக மார்க்சீயத்திற்கு பல்லாயிரம் முறைகள் மரணக்குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இந்த விஷயத்தில் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் ஊடகங்களும் சலித்ததேயில்லை. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிய தினத்திலிருந்தே இந்த மரணக்குறிப்புகள் எழுதப்படுவது தொடங்கிவிட்டது. ஆனால் 1990 பெர்லின் சுவர் இடிப்பு பொதுவுடைமை நாடுகளின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய பிறகு, ரஷ்யாவில் மிகாயில் கோர்பசேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரேய்க்கா, கிளாஸ்நாத் (அரசியல் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை)