பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி
ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்களின் வெளிச்சத்தில் யதேச்சாதிகாரங்களுக்கும் எதிரான போராட்டங்கள் குறித்த அலசல்
ஈரான் நாட்டுக் குடியரசின், ‘அறநெறிப் போலிஸார்’ ஹிஜாபைச் ‘சரியாக’ அணியாததற்காக 2022, செப்டம்பர் 14 அன்று 22 வயது மஹ்சா அமினியைக் கைது செய்தார்கள். அவர் இறந்த செய்தி 16 செப்டம்பர் 2022 அன்று பகிரப்பட்டது.
போலிஸ் காவலில் இருந்த மஹ்சா அமினியின் மரணம் ஈரானில் கொந்தளிப்பான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. காவலில் அவர் தாக்கப்பட்டதை மறுத்த போலிஸார், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறினார்கள். தெஹ்ரானில் அவர் இறந்த செய்தி வெளியான உடனேயே எதிர்ப்புகள் தொடங்கி, பின்னர் நாடு முழுவதும் பரவியது. எதிர்ப்பைக் கட்டுப்படுத்த அரசு ஒடுக்குமுறையைப் பிரயோகித்துப் பல உயிர்களைக் காவு கொண்டது. செப்டம்பர் 16 அன்று அமினியின் மரணம் பற்றிய செய்தி வெளிவந்ததிலிருந்து குறைந்தது 19 குழந்தைகள் உட்பட 185 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
<img alt="