தேசத்தின் மரியாதையைச் சுமக்கும் மட்டை
டான் பிராட்மேனின் வரலாற்று முக்கியத்துவம் அவருடைய சாசுவதமான 99.94 என்னும் சராசரியில் மட்டும் இல்லை; மாறாக அடையாளச் சிக்கலில் தவித்த ஆஸ்திரேலியர்களுக்கு அவர் பெற்றுத்தந்த அங்கீகாரத்திலும் இருக்கிறது. சச்சினின் வரலாற்று முக்கியத்துவம் அவர் குவித்த நூறு சர்வதேசச் சதங்களில் இல்லை; அரசியல் கொந்தளிப்புகளாலும் நிச்சயமின்மைகளாலும் விரக்தியில் ஆழ்ந்திருந்த இந்தியர்களுக்குத் தனது வெற்றியின் மூலமாக அவர் ஊட்டிய நம்பிக்கையில் இருக்கிறது. இந்த வரிசையில் வைத்து மதிப்பிடத்தக்கதுதான் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் வரலாற்று முக்கியத்துவமும். உலகத்தின் பார்வையில் இன்று பாகிஸ்தான் என்னவாக எஞ்சி நிற்கிறது? முடிவே தெரியாத தீவிரவாதம்; ஸ்திரமற்ற பொருளாதாரம்; கட்டுப்படுத்த முடியாத அகதிகள் பிரச்சினை; அணையாத உள்நாட்டுக் கலகங்கள்; ஷியா - சன்னி சச்சரவுகள்; திறமையற்ற ஊழல் அரசியல்வாதிகள்; எப்போது எனக் காத்திருக்கும் ராணுவம். ஆனால் பாகிஸ்தான் ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை. பாகிஸ்தானின் ஆன்ம அகவிளக்கு அணைந்துவிடாமல் எப்போதும்போலவே இப்போதும் கிரிக்கெட்தான் காத்து நிற்கிறது. இம்முறை கூடுதலாக அது சர்வதேசத்தின