உள்ளிரைச்சல்
ஓவியம்: ஜார்ஜ் ஷ்கோல்ஸ் நசித்திசேர் லார்ம். 1919
உள்ளிரைச்சல்
எனக்கு எப்போதும் இரைச்சல்கள் வேண்டும்!
அது மனிதர்களின் குரல்களாக இருக்கலாம்!
பறவைகளின் கத்தல்களாக இருக்கலாம்!
தெருநாய்களின் கூச்சல்களாக இருக்கலாம்!
இப்படி எதுவாகிலும் இருக்கலாம்!
என் உயிருக்கு இப்போதைக்கு
உபத்திரவம் இல்லை என்பதை
சுற்றிலும் இருக்கும் இரைச்சல்கள்தான்
எனக்கு உணர்த்தியிருக்கின்றன!
எனக்கு எப்போதும் இரைச்சல்கள் வேண்டும்!
அது பெரும் இரைச்சலாக இருக்க வேண்டும் என்ற
அவசியம்கூட இல்லை!
சிறு சப்தமாகக்கூட இருக்கலாம் தவறில்லை!
ஒழுங்கற்ற தாளத்தில், பொ