வின் பண்ணணும் சார்...
ஓவியங்கள்: மணிவண்ணன்
“ஒரு நிமிஷம் மோகனைப் பாக்கறா மாதிரியே இருந்தது” என்றான் கீர்த்திவாசன். அப்போது அவன் கண்களில் தெரிந்த வருத்தம் அரிதானது. பொதுவாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கண்கள் அவனுடையவை. திடீரென்று மோகனின் நினைவு வந்ததும் அவன் மனம் கசிந்திருக்கும். குட்டி ரவி அடித்த பந்து மிகச் சரியாக அவன் மட்டையின் மையத்தில் பட்டு வானில் சீறிப் பாய்ந்தது. நொடிப் பொழுதில் எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது. சரியான நீளத்தைக் காட்டிலும் சற்றே முன்னால் விழுந்த அந்தப் பந்தை மிகச் சரியாகக் கணித்து முன்னால் வந்து பந்து தரையில் பட்டு எழும்பும் கணத்தில் எழும்பும் இடத்தில் மட்டையைச் செலுத்தினான். சிறிதும் வன்முறை இல்லை. மட்டையின் முகம் முழுமையாகப் பந்து வீச்சாளரை நோக்கியபடி இருந்தது. மட்டையின் செங