வெற்றிகரமாகச் சாதல்
நாளை எப்படியும்
வெற்றிகரமாகச் செத்துவிடலாம்
தலையணைக்குக் கீழே படுத்திருக்கும் நீலத் திமிங்கிலங்களுக்கு
தோல் கீறி இரத்தம் காட்டும் நாள்
விடியப் போகிறது
உடலின் எந்த இடத்தில்
இரத்தம் குபீரெனப் பாயும்?
குழப்பமற்றுத் தெளிவாக ஓரிடத்தே கீற வேண்டும்
டாட்டு வரைவதுபோல அங்கும் இங்குமாகவும் கீறலாம்
எது எப்படியோஅடுத்த கட்டத்திற்கு நகர
இரத்தம் காட்டுதல் பொதுவிதி,
நிபந்தனைகள் உண்டு
இதை
ஒரு சராசரி யானையின் நிறைக்கு ஒப்பான
நீலத் திமிங்கிலத்தின் நாக்குத் தீண்டுவதற்குள்ளாக,
ஒருமணி நேரத்தில்
முப்பத்தியொரு மைல்கள் ஓடும் திமிங்கிலத்தின்
வேகத்திற்கு இணையாகச் செய்தாக வேண்டும்
ஐம்பதாவது நாள்
தற்கொலையைப் பரீட்சிப்பது
விடியலின் சுத்தமான தெளிந்த மஞ்சள் வெளிச்சம்
முதலில் விழுந்