தலையங்கம்

‘ஓயுதல் செய்யோம், தலைசாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம்; பல வண்மைகள் செய்வோம்’ என்ற பாரதியின் வரிகளைத் தனது இதழின், வாழ்வின் செயல்முறையாக நம்பி வாழ்ந்த ஞாநி ஜனவரி 15 அன்று மறைந்தார். மறைவுக்குச் சில மணி நேரங்கள் முன்புவரையிலும் ஓயாமல் செயல்பட்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் தலைசாயாமல்

தலையங்கம்

ஒரு கருத்தைக் காட்டிலும் அந்தக் கருத்து எதிர்கொள்ளப்படும் விதம் சில சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது. குறிப்பாக, தங்களால் ஏற்க முடியாத கருத்தை ஒருவர் வெளியிடுவதே குற்றம் என்று கருத்தாளரின் வாயை அடைக்கும் செயலில் சிலர் ஈடுபடும் விபரீதம் அரங்கேறும் நிலையில் வினைகளைக் காட்டிலும் எதிர்வினைகள் ம

கடிதங்கள்

ஒக்கிப் புயலில் சிக்கித் தவித்த குமரி மக்களின் அழுகை இன்றுவரை தீர்ந்தபாடில்லை. அம்மக்களின் சோகங்களை, கொடுந்துயரினை அப்படியே பதிவு செய்திருப்பதும், மக்களை மக்களாக மதிக்காமல், அறத்தைப் பேணாமல், நேர்மையைப் பெருக்காமல், நீதியைக் காணாமல் வாளாவிருக்கும் அரசின் அலட்சியத்தைக் காட்சிப்படுத்தியும் எழுதப்பட்டி

அஞ்சலி
சமுத்திரன்

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங் களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜன

கவிதை
வண்ணநிலவன்

எப்போதும் போலிருக்கவே இப்போதும் முயல்கிறேன் எப்போது இப்போதானால் எப்போதுதான் எப்போதும் போலிருப்பேன்   தாதன்குளத்தில் வெட்டுண்ட பனைகளைத் தேடி கால்கள் அலைந்து சலிக்கின்றன காரைவீடும் காரைவீட்டுப் பிள்ளையும் போனபிறகு பனைகள் மட்டும் தரித்திருக்குமா? என்றாலும் - பதனீர் வாசனையோ போகு

கவிதை
பாதசாரி

மொழிதல்   மாளாத் துக்கத்தின் தீரா மௌன ஓலம் என் கவிதையின் அடிநாதம் கருணை உயிர்ச் சூழல் விகசிப்பின் இயற்கை வியப்பு இன்னொருவர் தம் கவிதையின் சுனைக் கீதமாகலாம் அநீதிக் கெதிரான வாள் வீச்சின் பளபளப்பாகச் சிலர் கவிதை மின்னல் தெறிக்கலாம் எதுவாயினும் உயிரின் பெருமூச்சையே கவிதையென மொழி க

கவிதை
நந்தகுமார்

1 ஒரு தோல்வியுற்ற கணத்தில் தான் அவனைச் சந்தித்தேன் உண்மையில் அவனது மறுமுனையின் குரலை. அந்தக்குரலின் ஏக்கமுற்ற குழறல்கள் ஒரு பெரிய பாடலின் அல்லது புதிரின் விடுபட்ட தடங்கள் போல தொடர்ச்சியாகவும் பின் தொடர்ச்சியைத் தொலைத்தும் வெகுதொலைவிலும் பின் நெருக்கமாகவும் பின் தொடர்கிறது அது ஒரு குடிகா

கவிதை
சிவசங்கர் எஸ்.ஜே

அவனும் இவனும் களத்தில். . . அந்த அம்பயர் நான்கு விரல்களைப் பக்கவாட்டில் வீசுகிறான் இரண்டு கைகளின் ஒற்றை விரல்களைச் சேர்ந்தாற்போல் வான் நோக்கி உயர்த்துகிறான். கவிழ்ந்த இரட்டை விரல்களை சுட்டுகிறான் இடைவேளைக்குப்பின் அவனும் இவனும் பந்து வீச ஒவ்வொரு பந்துக்கும் ஒற்றை விரலை உயரே தூக்

மதிப்புரை
மயிலம் இளமுருகு

முதலியார் ஓலைகள் (நாட்டுப்புறவியல்) அ.கா. பெருமாள் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை நாகர்கோவில் &1 பக்கம்: 175 ரூ. 195   ஒரு நாட்டின் வரலாற்றினை அறிந்துகொள்ள உதவியாக இருப்பவை பல உள்ளன. அதனுள் குறிப்பாக கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழந்தமி

பதிவு
எஸ்.இ. ஜெபா

15.01.2018 அன்று மறைந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இக்கட்டுரையைத் தொடங்குவது முறை. ஜனவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதிமுடிய வாசகர்கள் தங்கள் வாசிப்பைக் கொண்டாடும் விதமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்த செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேனிலைப் பள்ளிவளாகத்தில

அஞ்சலி
பொன். தனசேகரன்

பேசு, உனது உதடுகள் சுதந்திரமாகத்தான் இருக்கின்றன பேசு, உனது நாக்கு இன்னமும் உனக்குச் சொந்தமாகத்தான் இருக்கிறது வளைந்து கொடுக்காத உடல் இன்னும் உன்னிடம் இருக்கிறது பேசு, உனது வாழ்க்கை இன்னும் உன்னிடம்தான் இருக்கிறது உடலும் நாக்கும் இறப்பதற்கு இருக்கும் நேரம் மிகக் குறுகியதாய் இருந்தாலும் பேசு, இ

கதை
அ. முத்துலிங்கம்

இடது பக்க எஞ்சின் அணைந்துவிட்டது என்று விமானி அறிவித்தார். பயணிகளுக்கிடையே ஒரே பரபரப்பு. மூன்றாவது இருக்கையைச் சாய்த்துவிட்டுப் படுத்துக்கிடந்த பெண் நிமிர்ந்து உட்கார்ந்து ‘ஓ’ என்று தலையிலே கைவைத்து அழ ஆரம்பித்துவிட்டார். விமானப் பணிப்பெண் ஆறுதல் சொன்னார். “ஒன்றுதான் அணைந்தது. இ

கட்டுரை
அரவிந்தன் கண்ணையன்

”எம்.எஸ். சுப்புலட்சுமியின் நிறம் கறுப் பாக இருந்திருந்தாலோ, அவர் தன்னை பிராமணப் பெண்மணியாக முன்னிறுத் தாமல் இருந்திருந்தாலோ, பக்த சிரோன்மணியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தாலோ அவர் இன்று பிராமணர்களிடையே அடைந் திருக்கும் ஏகோபித்த ஏற்பையோ புகழையோ அடைந்திருப்பாரா,” என்று டி.எம்.

கட்டுரை
ஓ.பி. ரூபேஷ்

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு 2017 அக்டோபர் 9இல் 36 பிராமணரல்லாதோரை - 6 தலித்துகள் உட்பட (வேறுவேறு தலித் சாதிகளிலிருந்து) பிராமண ஆகமக் கோயில்களுக்கு அர்ச்சகர்களாக நியமித்தது. இவர்களில் பெரும்பான்மையோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஈழவர்கள். கோயில் அர்ச்சகர்கள் பணிக்கு இட ஒதுக்கீட்டு முறையில் நிய

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் சினிமா கதையாடல்களில் காதலுக்கு அடுத்தபடியாக அனாதை என்ற அம்சத்திற்குத் தான் அதிக இடம் கிடைத்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அனாதை என்ற சொல்லாடலை மையப்படுத்தி பாத்திரங்களும் கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் இடம்பெற்ற மற்றொரு அம்சம் அப்பாவைத் தேடும் நாயகன்.

கதை
சுரேஷ் பிரதீப்

பாண்டவையாற்றைக் குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்துகிடந்தது. மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கிய போது சாலையில் பரவலாகத் தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களைக் கூசச் செய்தது. புறங்கையைக் கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உ

புதிதினும் புதிது

ரீட்டாபரமலிங்கம் நார்வேயில் வாழும் 24 வயது நிரம்பிய தமிழ்ப்பெண் எழுத்தாளர். நோர்வேமொழியில் எழுதுபவர். ஈழத் தமிழ் பின்னணியினைக் கொண்ட இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். ரீட்டாநோர்வேமொழியில் எழுதிய முதலாவது நாவல் 2017ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. La meg bli med deg (Let me staywith you) என்பது

புதிதினும் புதிது
விஷால் ராஜா

மனிதர்கள் எதற்காகக் கதை சொல்லத் தொடங் கினார்கள்? அச்சத்தினால் என்பது ஒரு பதில். இருள், ஒளி, உடல், மரணம் என உலகின் ஒவ்வொரு புரிபடாத விசித்திர அம்சமும் இருப்பும் ஆதி மனிதர்களில் மிகுதியான அச்சத்தைப் புகுத்தி யிருக்கும். கதைகளின் வழியாக இயற்கையோடு சமரசம் செய்துகொண்டு அவர்கள் அச்சத்தைக் கடந்தார்கள்

நேர்காணல்
பற்றிசியா ஜேனட்

பற்றிசியா ஜேனட், ஸ்காட்லாந்து, இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியிலமைந்த மேற்கு ஆக்ஸ்போர்டின் அஸ்தல் என்னுமிடத்தைச் சேர்ந்தவர். கோமகள் ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சிய வரலாற்றின் முதன்மையான பெண்களில் ஒருவர். இங்கிலாந்து மகாராணியின் ஆலோசகர்களில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதலாவது ஆலோசகர் இவர்தான். அவரு

கதை
குமாரநந்தன்

கார் மெல்ல ஊர்ந்து சென்றது. நகரம் ஒரு பெரிய நாடகத் திரையாக அவர்களை நோக்கி நகர்ந்து வந்தது. நகரின் மீது பெரிய டிராகன் பறந்துவருவதைப்போல இருந்த மேம்பாலத்தைப் பிரமிப்புடன் பார்த்தாள் காயத்ரி. ரகுராமின் கண்கள் வேறேதோ காலத்தைப் பார்த்தவாறு இருந்தன. ரவுண்டானாவைச் சுற்றி வாகனங்கள் தேங்க ஆரம்பித்தன. போக

கவிதை
ரிஷான் ஷெரீப்

எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர   ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்சுறுத்தும் சிலவேளை அதன் அசட்டுச் சிப்பிக் கண்கள்   இரைக்காகக் காத்திருக்கும்வேளையில் அக் கண்களினூடு ததும்பும் சலனமற்ற ஒற

கட்டுரை
அம்ஷன்குமார்

மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு பதிப்பாசிரியர்கள்: கோப்பாய் சிவம் செல்லத்துரை சுதர்சன் முதற் பதிப்பு: 2016 வெளியீடு: சர்வானந்தமய பீடம் சுன்னாகம் இலங்கை பக்கம்: 945 விலை: இலங்கை ரூபாய் 3,000 மறுமலர்ச்சி ஈழத்தமிழின் முதல் இலக்கியச் சிற்றேடு என்னும் அங்கீகாரம் பெற்றது. 1946இலிருந்து 1948

விருதுகள்

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவ

உள்ளடக்கம்