காலம்
எனக்கு முன்பாக
இந்தத் தடத்தில்
நடந்து சென்றவர்கள்
எப்படித்தான்
இவ்வளைவு நெளிவுகளைக்
கடந்தார்களோவென
களைப்போடு எண்ணும்போது
புரியத் தொடங்குகிறது
எனக்குப்பிறகு தொடர்பவர்களுக்கான
பயணப் பொழுதுகளையும் சேர்த்து
பத்திரப்படுத்தியபடி
சாவி கொடுக்க மறந்த
பழைய கடிகாரத்தின்
முட்களின் அடியில்
முறுக்கவிழ்ந்த சுருள்வில் நடுவே
சுருண்டு படுத்திருக்கும்
காலத்தின் சூட்சுமம்.
கால சாட்சி
நிலம் நோக்கி
தாழ ஒளிரும்
சூரியனின் கதிர்களுக்கும்
சூரியகாந்திப் பூக்களின்
வான் நோக்கிய முகத்திற்கும்
இடைப்பட்ட தூரமே
காதலின் வெளி
ஒளியின்
நகர்வோடு சேர்ந்து
கிழக்கிலிருந்து