அரசு இயந்திரத்தின் வன்முறை
சாதியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் 1957இல் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் அவரது நினைவு நாளான கடந்த செப்டம்பர் 11ஆம் நாள் ஏராளமான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தத் திரளவிருந்த நிலையில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வரை இறந்துள்ளனர். இறந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியாத அளவிற்கு இத்தாக்குதல் கடுமையானதாக இருந்திருக்கிறது. அத்துடன் துப்பாக்கிச் சூடு நடந்த காலை 11 மணிக்குப் பின்னரும் மாலை
5 மணி வரை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
சாதுரியமாகக் கையாண்டிருக்கக்கூடிய பிரச்சினையைத் தவறாகக் கையாண்ட காவல் துறையினரால்தான் இந்த வன்முறை நடந்திருப்பதாக இப்பிரச்சினை குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமானுவேல் குருபூஜை என்னும் பெயரில் முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த ஜான்பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக் கோரிச் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இம்மறியலால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறை தெரிவ