தீராத தேடல்களின் சாகஸம்
ஜீ. சௌந்தரராஜனின் கதை
ஆசிரியர்: எஸ். செந்தில்குமார் |
நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ் எழுத்து அதன் பரவசங்களிலிருந்தும் அமைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட விழுமியங்களிலிருந்தும் இப்புதிய தலைமுறை எழுத்தாளர்களால்தாம் மீண்டுகொண்டிருக்கிறது. முதல் தலைமுறைக் கதைகளுக்குள் வாசக வெளியையும் ஆக்கிரமித்தமர்ந்திருந்த ஸ்திரமான கதை சொல்லி இன்றைய கதைகளுக்குள் இல்லை. அதற்குப் பிறகு வந்தவர்கள் மேற்கின்