மண்ணின் சாரம் செறிந்த கவிஞர் : தா. இராமலிங்கம் (16.08.1933 - 05.10.2008)
கவிஞர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய பேச்சு, இலக்கிய உரையாடல்களில் வருகையில், தவிர்க்க முடியாதவாறு நாவலாசிரியர் ப. சிங்காரமும் கூடவே என் நினைவில் வருகின்றார். இருவருமே தம் காலத்தின் முக்கியமான இரு படைப்புகளைத் தந்துவிட்டு, மௌனமாகவே விலகி நின்றிருக்கிறார்கள். இருவர் படைப்புகளும் அவை வெளிவந்த காலத்தில் உரிய கவனத்தைப் பெறவுமில்லை. ப. சிங்காரத்தின் நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அவரைச் சந்தித்தவர்கள், அவரிடம் கூறியபோதெல்லாம் அப்படியா? இப்போது அதற்கென்ன? என்றவிதமாய் அது ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத விடயம் போன்ற பாவனையுடன் இருப்பதை அவர்கள் பதிவுசெய்துள்ளனர். ‘அலை’ இதழை நாங்கள் நடத்திய காலங்களில் நானும் அ. யேசுராசா, இன்னும் ஒருவரும் தா. இராமலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தோம். இடையில் அ. யேசுராசா, “இவர் உங்