Your cart is empty.
கொத்து 12 (பனி சொல் அல்லது தவம் , பெருஞ்சூறை , வேளிமலைப் பாணன் )
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் மேலும்
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விரி மேலும்
-இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின மேலும்
-முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் ப மேலும்
-இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நி மேலும்
-ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய மேலும்
-மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் மேலும்
-கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக மேலும்
-கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உர மேலும்
-இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் க மேலும்
-ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செ மேலும்
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் 1944’, ‘இந்தியா 1948’ என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட படைப்பு. அசோகமித்திரனின் விருப்பப்படி இரண்டு குறுநாவல்களும் இணைக்கப்பட்டு ஒரே நாவலாக தற்போது முதல் முறையாக பிரசுரிக்கப்படுகிறது. கால நீட்சியில் மங்கிப்போன நினைவுகளை மீட்டெடுப்பதன்மூலம் அசோகமித்திரன் மனிதர்களையே, அவர்களது போராட்டங்களையே முன்வைக்கிறார்.
‘India 1944-48’, a novel by pioneer Tamil writer Ashokamitran, is about two lives - before and after the Indian independence. Published first as two separate novellas 'Bombay 1944', 'India 1948', the work has been now compiled into a single novel as per the author’s wish. Reclaiming memories blurred by the unstoppable flow of time, Ashokamitran paints men and their struggles from two varied and important time periods of the nation.
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் பற்றிய விரிவான முதல் ஆய்வு இது. மத மறுப்பில் தொடங்கி மதச் சகிப்புத்தன்மைவரை திராவிட அரசியல் பெற்றுவந்த மாற்றங்களையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
தேர்தல் புள்ளிவிவரங்கள், செய்தித்தாள்கள், கட்சிகளின் துண்டுப் பிரசுரங்கள், திரைப்படங்கள், அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல், இனம் சார்ந்து மக்களை அணிதிரட்டுகையில் சகிப்புத் தன்மையையும் ஜனநாயக உணர்வையும் கட்சித் தலைவர்களும் குடிமக்களும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் காட்டுகிறது.
திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளையும் வெகுசன அரசியலையும் அவற்றின் பன்முகப் பரிமாணங்களுடன் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. அபாரமான வாதங்களும் அபரிமிதமான ஆதாரங்களும் கொண்ட இந்த நூல் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பலனளிக்கக் கூடியது.
வெகுமக்களியத்தின் உலகளாவிய ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறையை நரேந்திர சுப்பிரமணியன் முன்வைக்கிறார். வெகு மக்களியம் குறித்த உலக அளவிலான ஒப்பாய்வில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை இது தெளிவுறக் காட்டுகிறது.
-இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இறுக்கமான கதைக் கட்டுமானங்கள், படிமங்களால் ஆன மொழி, சுருள் அடுக்குகளாக உருப்பெறும் கதையாடல் எனப் பல்வேறு பரிசோதனைகள் உலக அளவிலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இத்தனைக்கும் மத்தியில் எளிய, நேரடியான கதைகூறும் பாணி வழக்கொழிந்துவிடாமல் தன் அழகையும் அற்புதத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மகத்தான இலக்கிய அனுபவத்தையும் தருகிறது. நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி எளிய கதைகூறல் முறையில் எழுதிய கதைகளில் தேர்ந்தெடுத்த சில இந்தத் தொகுப்பில் உள்ளன. புனைவில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்திருக்கும் சுந்தர ராமசாமி நேரடியாகக் கூறியிருக்கும் கதைகள் இவை. எளிய வடிவத்திலும் காத்திரமான இலக்கிய அனுபவத்தை வழங்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இவை திகழ்கின்றன.
-முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. படைப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே இயல்பில் படைப்பாளிகளைக் குறித்தும் பேசுகிறார். முடிவானவையாக இல்லாமல் அபிப்பிராயங்களாகவே பகிர்ந்துகொள்கிறார். நீண்ட காலப் படைப்பனுபவமும் இலக்கியப் பட்டறிவும் வண்ணநிலவனின் கருத்துகளைப் பொருட்படுத்திச் சிந்திக்க வாசகரைத் தூண்டுகின்றன.
-இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நினைவேக்கமற்றுச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. மறுபகுதிக் கவிதைகள், ‘இல்லாத இன்னொரு பயணத்திற்கான’ தயாரிப்புக் குறிப்புகளாகவும் இரங்கற்பாடலின் மூட்டமுள்ளதாகவும் சுதந்திரமான ஹைக்கூவின் அம்சமுள்ளவையாகவும் உள்ளன.
இக்கவிதைகள், ஆழ்ந்த மௌனத்தைத் தமக்குள் கடத்திக்கொள்வது மட்டுமின்றி வாசகரிடமும் அதைக் கடத்துகின்றன. ஆசுவாசத்திற்கு எந்த உத்தரவாதமும் அளிக்காமல் வேறொரு கதியில் நிதானிக்க வைக்கும் கவிதைகள் இவை.
-ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் அக்கறை கொண்டோருக்குப் பயன்மிகுந்த ஒரு நூலைத் தேவகாந்தன் தந்திருக்கிறார்.
இது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பின் ஒரு முத்துக்குளிப்பு. எமது நாவல் இலக்கியக் கையிருப்பையும் அதன் தாரதம்மியத்தையும் ஒருசேரத் தொகுத்தளித்திருக்கும் பெரும் படையல். ஒரு சிருஷ்டி எழுத்தாளன் தேர்ந்த விமர்சகனாகவும் முகிழ்த்து, தனது வாசிப்பு என்ற உலைக்களத்தில் வார்த்தளித்த பனுவல் இதுவாகும்.
-மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை நூற்றாண்டில் தமிழில் வெவ்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் 'இலக்கியமும் திறனாய்வும்' திகழ்கிறது.
பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.
The relationship between language and literature, literary principles, style are some of the elements that Kalaisapathy explores, as he guides us into the world of critical thinking. The manner in which critical studies differs from earlier literary traditions is clearly delineated. He argues the case that critical studies is a distinct field. He classifies modern trends in critical studies, revealing their contours and nuances. In the half century since this novel’s initial release, different theories of criticism have emerged in Tamil. This groundbreaking book is central to understanding these trends.
-கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக்கும் ஜாலம் இக்கவிதைகளில் காணக்கிடைக்கிறது. தொன்மத்தின் வாசம் உள்ளோடி நிற்கும் மொழி, சொல்தேர்வின் நேர்த்தியைக் காட்டுகிறது. பார்வையின் கூர்மை மொழியின் திண்மையாக வெளிப்படுவது பெருந் தேவியின் கவிதைகளின் சிறப்பென்று சொல்லலாம். பெண் மனத்தின் வலிமையான அம்சங்களை முன்னிறுத்துபவையாக இக்கவிதைகள் தோற்றம் கொள்கின்றன.
Complex emotions like angst, frustration and despair play magic in Perundevi’s poems. Her language is prolific and precise. Her sharp perspective and dense language are not contradicting; rather related. The strong threads of a women’s mind shine through her poems.
-கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாளராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை, அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்கனின், ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர், நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
Gauri Lankesh was the definitive activist-journalist, someone whose head and heart worked as one to encompass her life. Gathered here is a selection from Gauri’s writings, spanning languages, publications and the length of her career in Kannada and English. It flags the unfinished work and uphill struggles that remain her legacy, but also preserves her companionable voice for us to cherish, a talisman and inspiration. She was taken away from us in the middle of life, of living busily, large-heartedly and with a clear gaze on the world—the qualities that animate this collection. The book edited by scholar translator Chandan Gowda is translated in Tamil by Pon. Dhanasekaran.
-இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலங்காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்? வெறியா? அகங்காரமா? வெறுப்பா? கசப்பா? ஆத்திரமா? சீற்றமா? எரிச்சலா? எது இவர்களைத் தூண்டுகிறது? எது இவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது? ஒரு பிறப்பையே கேவலம் என்று ஏளனம் செய்ய இவர்கள் யார்? பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளின் விளைவாக, சமூகத்தின் உடல் முழுக்கக் காய்ப்பேறிய தழும்புகள் மட்டுமே உள்ளன. ஒரேயொரு அங்குலம்கூட அதன் உடல்பகுதி வெளியே தெரியாதபடி எங்கெங்கும் தழும்புகள். அரவிந்த மாளகத்தியின் எழுத்துகளில் இத்தகு தழும்புகளையே நாம் காண்கிறோம். எழுத்தும் படிப்பும் கைவரப்பெற்ற ஒருவரின் குறிப்புகளே இந்த அளவுக்கு நமக்குத் தலைகுனிவையும் நாணத்தையும் உண்டாக்க வல்லன எனில், படிப்பும் எழுத்தும் அறியாத பாமர ஜனங்கள் வாய்திறந்து பேசத் தொடங்கினால் நம் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.
Government Braminan is the classic biography written by Arvinda Malakatti in Kannada and is translated to Tamil by Paavannan. In this world that debilitates other is also a human and who suffers due to that is also a human. Why these ruthless people do not care about others as human similar to them? What pleasure would they enjoy in being brutal to them based on caste? How dare they ridicule someone’s birth? Due to the cruelty shown towards a community in past few decades there are only scars left to show. In Aravinda Malakatti’s writing we can see only these scars. The notes written by someone from that community who is educated makes us feel guilty and shame. In case illiterate people open their mouth we can’t curse ourselves for being evidence for these victims.
-ஒரு கனாபோல் நம்மைக் கடந்தோடும் காலத்தைக் கையில் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் காலத்தின் கரைதல் மட்டுமல்ல; அவை நம் மனத்தின் ஈரத்தையும் துடைத்துச் செல்கின்றன. வெறுமையாக நம்மைச் சூழப்போகும் தருணங்களை உடைத்தெறிந்து மீண்டும் நமக்குள் பசும்புல்போல் தழைக்க வைப்பதே மீரான் மைதீனின் கதைகள்! மனிதர்களை விட்டுச் செல்ல முடியவில்லையென்றால், நாம் மண்ணைவிட்டும் செல்ல முடியாது. மண்ணும் மனிதர்களுமாகக் கலந்து கட்டும்போது ஒளிர்கிற அன்பை - நேயத்தை ஓர் இலக்கியம் சுடராக நம் முன்னே கொண்டுவந்து கொட்டுகிற எழுத்துகள் மீரானுடையவை.
“பார் இவ்வுலகை! பார் அதன் இன்பத்தை!” என்று சொல்வதற்கான கலை நயம் என்னவாக இருக்க முடியுமோ, அவ்வாறே இருந்துவிட்ட சில கதைகளின் தொகுப்பு இது.
The collection of short stories by Meeran Maitheen gives the readers a refreshed perspective on life. Time passes quickly like a dream, and we cannot hold back some moments even if we wish to. These stories are filled with moments like those and helps us find the humanity we missed with them. Evoking a love that is found when certain characters and landscapes meet, the writings lets us see this world and all it offers us with a new eye.