தலையங்கம் - 1

குமரி இருபுறம் சமுத்திரங்களாலும் ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிருந்தாலும் அதற்குப் புயல் எனும் அனுபவம் புதிது. கடலைத் தம் தாய்மடியாகக் கருதும் மீனவ சமுதாயம் பெருகியிருப்பது இங்குதான். அது ஒவ்வொரு முறையும் வெவ்வேறான இயற்கைச் சீற்றங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. நீருக்குள் வாழ்ந்தும் தாழ

தலையங்கம்-2

குஜராத் தேர்தல் முடிவுகள் மதவாதச் சிந்தனைக்கு எதிரானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது. அந்த நம்பிக்கை என்பது பல சிக்கல்களையும் கொண்டுள்ளது. இந்துத்துவ எதிர்ப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தச் சிக்கல்களைப் பூசிமொழுகி மறைப்பது அரசியல்வாதிகளின் பணி. சிக்கல்களை ஒளிவுமறைவின்றிப் பிரச்சனைப்படுத்துவதே நமது நோ

EPW பக்கங்கள் - 1

பலவீனமான நீதித்துறை என்பது அரசமைப்பு ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘வாளோ பணமோ’ தனது கைகளில் இல்லாத நிலையில் நீதித்துறையானது எந்தப் பிரச்னையிலும் அது சிவிலோ குற்றவியலோ, அரசமைப்பு தொடர்பானதோ, எந்தப் பக்கமும் சாராது சுதந்திரமாக நடுநிலையுடன் செயல்படுவதற்கு அது எவ்வாறு செயல்படுகி

EPW பக்கங்கள் -2

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தொழிற்சங்கங்கள் தங்களது உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நாட்டில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன பின்னர், சங்கம் அமைப்பதற்கும் கூட்டாகப் பேரம் பேசுவதற்குமான உரிமைகளைத் தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்துப் பல பத

புதிதினும் புதிது
சுகுமாரன்

அண்மைக்கால இலக்கிய விசாரிப்புகள் இரண்டு சிந்தனையைத் தூண்டிவிட்டன. பதிப்பாளர் ஒருவர் தாம் வெளியிடவிருக்கும் தமிழ்க் கவிதைத் திரட்டுக்காகப் புதிதாக எழுதிவரும் கவிஞர்களின் பட்டியலைக் கேட்டார். மலையாளப் பதிப்புலகைச் சேர்ந்த நண்பர் தமிழ் புனைகதையில் நடைபெற்றிருக்கும் மாற்றங்களையும் புதுவரவுகளையும் தெரிந

கதை
சித்துராஜ் பொன்ராஜ்

அவர்கள் காலுக்கடியில் கிடந்த வெதுவெதுப்பான கறுப்பு மணலை நீருக்குள் முங்கிக் கைகளில் அள்ளிக்கொண்டார்கள். மணல் கையில் சேறாய்க் குழைந்தது. அதே சமயம் உப்புத்தாளைப்போல் தொடுவதற்குச் சொரசொரப்பாகவும் இருந்தது. கையில் திரட்டிய மணலை உள்ளங்கையில் புரட்டி முகம், தோள், மார்பு என்று பூசினார்கள். விடாமல் புறப்ப

கதை
ஜா. தீபா

திருமடம் மழையின் அடைசலில் ஆழ்ந்துபோய்க் கிடந்தது. சுற்றுச்சுவருக்கும் திருமடத்திற்கும் இடையில் செல்கின்ற பாதை முழுக்க சிமென்ட் பெயர்ந்து சிறுசிறு புற்கள் முளைத்திருந்தன. புற்கள் கால்களால் அரைபடும் இடத்திலிருந்து வீடு தொடங்கியிருந்தது. வீட்டின் நுழைவாயில் ஒற்றைக் கதவைக் கொண்டது. சாவித் துவாரத்தைச்

கதை
எல்.ஜே. வயலட்

Photo Courtesy: aurpera யாத்ரிகன் க்ருப்யா த்யான் தீஜியே...  ரயில் ஒரு பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ரயில் பெரிய சிறிய ஊர்கள் பலவற்றைத் தாண்டிச் செல்கிறது, சிலவற்றில் நின்றும் பலதில் நில்லாமலும். ரயில் பெரிய நதிகள் பலவற்றைத் தாண்டிச் செல்கிறது, அதற்காக இரும்

புதிதினும் புதிது
ரா. கிரிதரன்

1986 ஆம் ஆண்டு பிறந்து, காரைக்குடியில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணனை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். சுனில் கிருஷ்ணன் ‘காந்தி டுடே’ (www.gandhitoday.in <http://www.gandhitoday.in/>) எனும் இணையத்தளத்தின் நிர்வாகியாக அறிமுகமாயிருந்தார். தொடங்கிய இரு ஆண்டுகளுக்கு

கதை
முத்து வேல்

சிகாமணிக்கு மூன்று ஊர்கள். கந்தன்பாளையம், வெள்ளங்கொண்ட அகரம், கடுக்கலூர். ‘யாதும் ஊரே யாவருங் கேளிராக’ச் சுழன்றோடும் காலவெள்ளம் செத்தைசெனார்களாக குப்பைக்கூளங்களாக, யாரை எங்கு சேர்க்கும் என்பது யார் கையிலிருக்கிறது? வெள்ளத்தின் போக்கில் விட்டுவிடுவதைத் தவிர. வெள்ளங்கொண்ட அகரம் காரணப் ப

புதிதினும் புதிது
இசை

தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுந்து வந்த குறிப்பிடத் தகுந்த கவிஞர்களுள் ஒருவர் சபரி¢நாதன். 2011ஆம் ஆண்டு ‘களம் காலம் ஆட்டம்’ என்கிற கவிதைத் தொகுதியும், 2016ஆம் ஆண்டு ‘வால்’ என்கிற கவிதைத் தொகுதியும் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன; விருதுகளையும் பெற்றுத்தந்தன. 2014இல

கவிதை
இசை

ஹ்ஸ்டுபிட்ஸ் அவ்வளவு பிரதானமான சாலையில் அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான். பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் போனார் சுதாரித்துக் கடந்த பிறகு   காலூன்றி நின்று சாலையைத் திரும்பிப் பார்த்தார். அதிகாரிகளைப் பார்த்தார் அரசைப் பார்த்தார் அமைச்சரைப் பார்த்தார் முதல்வரை, பிரதமரைப் பார்த்தார் ரோடு காண்ட்ர

கதை
கார்த்திக் பாலசுப்ரமணியன்

தளர்ந்து தொங்கிய தூய்மையான வெள்ளைநிற ஆடை அவரது உடலை நிறைத்துக் கால்களைத் தழுவி, மண்ணிலும் கொஞ்சம் பட்டுப் படர்ந்திருக்கிறது. அதற்கு மேலே பெரிய சிவப்புநிறத் துண்டொன்றை இடப்பக்கமாய்ச் சுற்றியிருக்கிறார்.  நெஞ்சோடு சேர்த்தணைத்துப் பிடித்திருந்த ஆட்டுக்குட்டி அவரது இடதுகைச் சுட்டுவிரலைத் தன் நாவால

புதிதினும் புதிது
ரீனா ஷாலினி

  கடந்த வருடம் பரவலான கவனம் பெற்றது ‘கக்கூஸ்’ ஆவணப்படம். திவ்ய பாரதி இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருந்தது. மனித மலத்தை அள்ளும் தொழிலாளர்களின் பாடுகளைத் தயவுதாட்சண்யமற்ற வகையில் பார்வையாளர்களின் கண்முன்னே விரித்துக் காட்டின அந்தக் காட்சிகள். இதை ஒளிப

அறிமுகம்
ஹால்டார் குட்மன்ஸன் தமிழில்: எத்திராஜ் அகிலன்

  1955ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபெல் விருதைப் பெற்றதன் மூலம், இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற ஐஸ்லாந்து நாட்டு எழுத்தாளராக ஹால்டார் லேக்ஸ்நஸ் பரிமளிக்கிறார். 1902ஆம் ஆண்டில் பிறந்து, 1998ஆம் ஆண்டில் மறைந்த அவர், ஏறத்தாழ ஒரு முழு நூற்றாண்டை வாழ்ந்து கழித்திருக்கிறார். அறுபது நூல்களை எழுத

கதை
மு. தூயன்

  கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள், என்ன பெயர்,” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பதுபோல பாவ

கவிதை
போகன் சங்கர்

  இந்த சிகப்பு வானத்தில் கிடையாது இந்த சிகப்பு பூமியைத் தொடாது இந்த சிகப்பை சைத்திரிகர்கள் அணுகுவதில்லை இந்த சிகப்பை பால்வெளி அனுமதிக்காது இந்த சிகப்பை உங்கள் முதல் மாதவிடாயின்போது பார்த்திருக்கலாம் இந்த சிகப்பை நீங்கள் செய்த முதல் கொலையின்போது அறிந்திருக்கலாம் இந்த சிகப்பை இந்த சிகப்பு என்று

கதை
அமீபா

  1 சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் ந

அஞ்சலி - எம். சிவசுப்பிரமணியன் (1929 – 2017)
நெய்தல் கிருஷ்ணன்

  ‘உங்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது,’ என்றார் சுந்தர ராமசாமி. “உங்கள் கட்டுரை குறித்து அபிப்பிராயம் சொல்வது, பாராட்டுவது, எழுத ஊக்குவிப்பது, உற்சாகப்படுத்துவது. எங்கள் இத்தனைவருட நட்பில் ஒரு வார்த்தைக்கூட அவர் என்னிடம் சொன்னதில்லை.” சுரா சொன்னதைச் சொன்னதுதான

அஞ்சலி - எம். சிவசுப்பிரமணியன் (1929 – 2017)
சேரன்

எம்.எஸ்.-ஐ நினைக்கிறபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் ரவீந்திரநாத் தாகூர்தான். அதற்கு இரண்டு நியாயப்பாடுகள் உள்ளன. முதலாவது, தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் வருகிற ஒரு வரி (Story Birds, 155) ‘Silence will carry your voice like the nest that holds the sleeping birds.’ &ldqu

அஞ்சலி - எம். சிவசுப்பிரமணியன் (1929 – 2017)
அ.கா. பெருமாள்

நான் 50களில் எடுத்த படம் இது; அப்போது கிளித்திரீ கேமரா வைத்திருந்தேன்; ஒரு நிலவில் மாலையில் நல்ல வெளிச்சத்தில் எடுத்தது; இதைப் பின் அட்டையில் போடலாம்,” என்றார் எம்.எஸ். அவர் அப்போது என்னிடம் தந்தது விவேகானந்தா பாறையின் படம்; பாறை மொட்டையாக இருந்தது; திருவள்ளுவர் பாறையும் தெரிந்தது; கன்னியாகும

அஞ்சலி - எம். சிவசுப்பிரமணியன் (1929 – 2017)
ரீனா ஷாலினி

அபூர்வ மனிதர்கள் சிலரைக் கதைகளில் மட்டுமே பார்க்க முடியும். மனிதர்களோடு மனிதராக வாழ்க்கைச் சுழலில் உழலாமல், வாழ்க்கைமீது நடந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான மனிதராக எம். சிவசுப்பிரமணியன் என்ற எம்.எஸ். என் மனதில் இருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்வின் மகிழ்ச்சி, துயரம் இவற்றில் மூழ்கிவிடாம

அஞ்சலி - எம். சிவசுப்பிரமணியன் (1929 – 2017)
எஸ்.இ. ஜெபா

2012இல் காலச்சுவடுக்கு வந்த நான்காவது நாளிலிருந்து எம்.எஸ். என்ற பெரியவரைத் தெரியும் என்பது எந்த வகையிலும் பொருந்தாத வாக்கியம். அவரது முகத்தில் எப்போதும் மிளிர்ந்துகொண்டிருக்கும் சிரிப்பும் மூளையின் உற்சாகமும் சிறந்த ஞாபகசக்தியும் 80 வயதைக் கடந்து இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதை உணர்த்திக்க

கதை
க. வீரபாண்டியன்

பிரேத பரிசோதனை அறையில் அந்தப் பிணம் கிடந்தது. துர்நாற்றம் நூறு அடி தூரம் தள்ளியிருந்தவர்களையும் விரட்டி அடித்தது. இது பிணவாடை அல்ல. நாள் கழிந்த பிணம்தான் நாறும். இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன் வந்துசேர்ந்த பிணம் இது. பிணத்தின் மீதிருந்து வந்த நாற்றம் மனிதக் கழிவில் இருந்துவந்த வீச்சம். பிணமான

அறியப்படாத பாரதி
ய. மணிகண்டன்

  பாரதி கடலூருக்கு அருகில் கைதாவதற்குப் பத்து மாதங்களுக்கு முன் எழுதிய படைப்பு 'பீரங்கி சிப்பாய்'. பாரதியின் தனித்தன்மையான இந்த எழுத்தோவியம் முதல் உலகப்போரின் சூழல்களை எதிரொலிப்பதாகவும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் புதுமுறை முன்னோடி முயற்சியான தராசு கட்டுரைகளின் வரிசையில் நிறைவாக வைக்கத்தக்கதா

கவிதை
ஏ. நஸ்புள்ளாஹ்

  பயணம் இந்தப் பாதையை நீங்கள் கடந்து என்னிடம் வருவதெனில் காற்றில் ஏறவேண்டும் காற்றில் ஏறுவதற்கு உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உண்டு ஒன்று ஏணி தரப்படும் மற்றொன்று சிறகுகள் தரப்படும் பயணத்தைத் தொடரலாம் வழங்கப்பட்ட நிமிடங்களுக்குள் பாதையைக் கடக்க வேண்டும் சரியான தெரிவு முறை அவசியம் இல்லையெனில் ஏணிய

புதிதினும் புதிது
வெளி ரங்கராஜன்

  புதிய வெளிப்பாட்டுக்கான விழைவு களுடன் இளம் உணர்வுகள் கிளர்ந் தெழக்கூடிய காலகட்டமாக இன்றைய சூழல் உள்ளது. வர்த்தக மயமாக்கலின் சீரழிவுகள், மதிப்பீடு களின் வீழ்ச்சி, உறவுநிலைகளின் இறுக்கம் ஆகியவை ஒரு புதிய வெடிப்பைக் கோரும் நிலையில்தான் எதிர்ப்புணர்வின் புதிய வண்ணங்களை அவர்களது உடல்கள் தரிக்கின

புதிதினும் புதிது
சண்முகராஜா

  கடந்த பத்தாண்டுகளில் இளைஞர் கள் நாடகத்தில் பங்கேற்பது பரவலாகியிருக்கிறது. ஒரு பிரிவினர் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் நாடகப் பயிற்சியை மேற்கொள்ள சென்னையில் இயங்கும் நாடகக்குழுக்கள், நடிப்புப் பள்ளிகளில் (குறுகியகாலப் பயிற்சிகள்) பயின்று நாடகத்தில் ஈடுபடுபவர்கள். மற்றொரு பிரி

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

  கடந்த கோடைமாதம் பின்காலனியம் பற்றி முதுகலை, முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வருகைதரு விரிவுரையாளராகக் கொரியா போயிருந்தேன். வடகொரியா அல்ல தென்கொரியா. நான் கொரியாவுக்குப் போனது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கிறேன். முதலில் போனது 1992இல் என்ற ஞாபகம். நித்தியமானதும் நிரந்த

கவிதை
நஃப்லா

  மழை பெய்தலின் அறிகுறி பெரிதாக எதையும் வெளிக்காட்ட விரும்பாத ஒரு கருமுகிலிடம் மழை பற்றிய குறிப்பொன்றைக் கையளித்தேன். பன்னிரண்டு தடவைகள் இரவைச் சரிபார்த்துவிட்டு இறங்கி வந்து என் அறையில் அமர்ந்திருக்கிறது கவிதை எழுதவும் முடியாமல் பாடல் கேட்கவும் முடியாமல் கட்டிலில் விழுந்துகிடக்கிறேன். எல்லா

புதிதினும் புதிது
சேரன்

செல்லத்துரை சுதர்சன் அண்மைக் காலங்களில் ஈழத்தில் வெளியாகியிருக்கும் பழைய இலக்கிய, ஆவண, வரலாற்று நூல்களுள் சிறப்பும் பதிப்புத் திறனும் ஆய்வுச் செழுமையும் நுண்மாண் நுழைபுலமும் மிக்க இரண்டு நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் இளம் ஆய்வாளர் செல்லத்துரை சுதர்சன். மரபும் நவீனமும், புதுமையும் சோதன

புதிதினும் புதிது
களந்தை பீர்முகம்மது

செ.மு. நஸீமா பர்வீன் ‘தற்கால இஸ்லாமியத் தமிழ்ப் படைப்புகளில் பெண் உடல் அரசியலும் படைப்பாளி அரசியலும்’ என்ற பொருண்மையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டிருக்கிறார் செ.மு. நஸீமா பர்வீன். இஸ்லாமிய வாழ்வியலை உன்னித்துப் பார்ப்பவர்களுக்கு பட்ட ஆய்வின் தலைப்பு ஆச்சரி

திரை
இளவேனில்

பார்வையாளரை அதீத உணர்ச்சிவசப்படலுக்கு உள்ளாக்கி அழ வைப்பது இலகுவான வேலை. குறிப்பிட்ட வார்த்தையையோ காட்சியையோ அமைத்து அதைச் சாத்தியப்படுத்தி விட  முடியும். இதற்கு மெனக்கெடல் என்று தனியாக எதுவும் தேவையில்லை; மனிதம், அன்பு, காதல், தாய்மை போன்ற நைந்துபோன க்ளிஷே வார்த்தைகள் போதுமானவை. இறுதியில் மன

கட்டுரை
தி. பரமேசுவரி

  The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences - Rabindranath Tagore. பள்ளிப்பருவம் என்றாலே பச்சையம் பூத்த நினைவுகள் மனத்தில் பொங்கும் என்பதெல்லாம் சென்ற தலைமுறையின் வழக்காகி விட்டது. இப்போது பள்ளிப்பருவம் என்றாலே ம

கட்டுரை
கீதா நாராயணன்

  நவம்பர் 26, 27, 28 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற செவிலியர் போராட்டம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப்பின் பெரும் மக்கள் திரளைப் பார்த்த போராட்டம். நிரந்தரப் பணியாளராய் இருக்கும் செவிலியர் தமக்கென சங்கம் அமைத்து தம் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். 2015ஆம் ஆண்டில் மருத்து

கட்டுரை
நடராஜன் கங்காதரன்

1850ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஹன்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட கைவினை உற்பத்திக்கூடம்தான் பின்னாட்களில் ஓவியக் கல்லூரியாகப் பரிணமித்தது. இந்தியாவின் பழைமையான கல்லூரி. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட நுட்பமான கலைஞர்களைக் கொண்டு இங்கு வலுவான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்ப

கட்டுரை
வே. வசந்தி தேவி

  இன்று களத்தில் போராடும், பல வகையில் எதிர்குரல் எழுப்பும் இளைஞர் கூடும்போது ஒலிக்கும் கோஷம் ஜெய் பீம்! லால் சலாம்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பல பல்கழைக்கழகங்களிலும் ஊனாவில் ஜிக்னேஷ் மேவானியின் தலைமையிலான தலித் எழுச்சியிலும்  ஒலித்த முழக்கம். ஜே.என்.யூ. போராட்டக் களத்தி

விருதுகள்

டைம்ஸ் இலக்கிய விருது: பெருமாள் முருகன் 2012 முதல் மும்பையில் நடைபெற்று வரும் ‘டைம்ஸ் லிட் பெஸ்ட்’ இந்த ஆண்டு டிசம்பர் 15-17 தினங்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா நிறைவுநாளன்று பல்வேறு இந்திய மொழிகளில் பங்களிப்பு செய்த எழுத்தாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பத

கவிதை
பத்மபாரதி

  நீ  கொல்லப்படுகிற  காலம் உன்னை நாளெல்லாம் வதைக்கிற உண்மையின்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறவரை நீ நசுக்கிப்போகிற மற்றவர்க்காக சுவாசிக்கிறவரை தன்னையே செதுக்கி எழுதிக்கொள்கிற அவர்கள் நோக்கி நீதியின் பெயரால்அநீதியை கடவுளர்களின் பெயரால் கலவரத்தை பொய்க்கதைகளை கொடுங்கோன்மையை துப்பாக்கியை பர

அஞ்சலி - எஸ்.எம். கோபாலரத்தினம்
சேரன்

  1985 செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி என்று நினைவு. அன்றிரவுதான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி. தர்மலிங்கமும் ஆலாலசுந்தரமும் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஆங்கில வார ஏடான Saturday Reviewஇல் நான் பணிக்குச் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தன. எஸ்.எம்.ஜீ. (எஸ

அஞ்சலி - எஸ்.எம். கோபாலரத்தினம்
இளவாலை விஜயேந்திரன்

  அரைநூற்றாண்டுக் காலம் பத்திரிகையோடும் பத்திரிகைக்காரர்களோடும் வாழ்ந்து தனது வாழ்வை அர்த்தப்படுத்திய எஸ்.எம். கோபாலரெத்தினம் அண்மையில் மறைந்தார். கோபு என நீண்ட காலமும் எஸ்.எம்.ஜி. எனப் பிற்காலங்களிலும் அழைக்கப்பட்ட அவரோடு ஒரு சகாப்தம் நிறைவுக்கு வந்தது. பழைய முறையில் செய்திசேகரித்து, அச்சுக்

மீள்பார்வை- நூல் பகுதி
எஸ்.எம். கோபாலரத்தினம்

  1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை அதிகாலை ஆறு மணிகூட ஆகவில்லை. எனது வீட்டு வாசலில் ஒரு வாகனம் நிறுத்தப்படும் ஓசை கேட்டது. முன்னறையில் நான் கண்களை மூடிப் படுக்கையிலிருந்த போதும் வழமைபோல் முதல் நாள் சம்பவங்களை இரை மீட்டும், அடுத்துச் செய்ய வேண்டியவை பற்றியும் சிந்தித்

புதிதினும் புதிது
கருணாகரன்

 ‘கொலம்பஸின் வரைபடங்கள்’, ‘தேவதைகளின் தீட்டுத்துணி’, ‘சேகுவேரா இருந்த வீடு’ ஆகிய புனைவுப் பிரதிகளின் வழியாக பரந்த தளத்தில் அறிமுகமாகியவர் யோ. கர்ணன். ஈழப்போர் பற்றிக் கட்டமைக்கப்பட்டிருந்த புனிதக் கதையாடல்களை உடைத்து விசாரணை செய்யும் எழுத்துகளை முன்வைத்ததன்

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
சு. தியடோர் பாஸ்கரன்

இந்தத் தலைப்பின்கீழ் நான் பட்டியலிட்டுள்ள நாயினங்கள் மந்தைகளைக் காப்பது, வீட்டுக்கு - பண்ணைக்குக் காவல், வேட்டை போன்ற பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டை நாய்களுக்குத் தனியாக ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன். வடக்கு எல்லையான இமயத்தில் தொடங்கித் தெற்கு நோக்கிப் பயணித்துக் குமரிமுனைவரை உள்ள நா

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
லியா மில்ஸ்,தமிழில்:பெர்னார்ட் சந்திரா

இந்த நேரத்தில் என்னென்ன காரியங்களில் லியாம் மூழ்கியிருக்கிறானோ என்ற நினைப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வாசிப்பு அறையில் அதன் பலகையில் விரித்துவைக்கப்பட்டிருந்த புத்தகத்திலிருந்து பென்சிலால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பாதிரியார்களும் மாணவர்களும் ஏதோ வேலையில் மும்முரமாக இருந்தனர்.

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
சுகுமாரன்

வானில் மேகத்தின் சிறு கீற்றும் இல்லை. திசைகள் புலனாகாமல் வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல விரிந்திருக்கிறது. பார்த்தால் விழி கருகிப்போய்விடும் தகிப்புடன் சூரியன் சுழன்று கொண்டிருக்கிறது. மணல் வெளியெங்கும் கானல் அலை புரள்கிறது. உரக்க ஊளையிட்டு வரும் காற்றில் மணல் பறந்து இடம் மாறுகிறது. ஒரு மணற் சுழலில்

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
சித்துராஜ் பொன்ராஜ்

சுற்றியிருக்கும் கட்டமைப்புக்கு ஏற்றபடிதான் யோசிக்க முடியும் இப்போது என் கார் கண்ணாடியின் இடதுபக்கமாகப் பாதி வழிசலில் உறைந்துபோன நீர்த்திவலையைப் போன்ற ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. காரோட்டும்போது முன்னாலிருந்து பறந்து வந்த சிறிய கூழாங்கல்லோ, வேறு ஏதேனும் கடினமான பொருளோதான் விரிசலை ஏற்படுத்தி யி

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
தமிழ்ப்பிரபா

சாப்பிட்டு முடித்து, அவன் காம இச்சைக்கு ஒத்துழைத்தற்குப் பிறகு சோர்வுடன் பாயில் சாய்ந்தவளுக்கு கிளியாம்பாளைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆவல் பிறந்தது. சுவாரசியமான ஒன்றைப் பாதியில் நிறுத்திய வருத்தத்தைச் சமன்செய்ய, படுத்தவாக்கிலிருந்தே சுவரில் மாட்டியிருந்த கிளியாம்பாளின் புகைப்படத்தைப்

சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்
வாஸந்தி

இஅதிமுகவின் வெற்றிக் கொண்டாட்டம் அட்டகாசமாக இருந்தது. திமுகவுக்கோ தலை நிமிரமுடியாத தோல்வி. 174 தொகுதிகளில் நின்று இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 163 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. அடேயப்பா, எப்படிப்பட்ட ஜாம்பவான்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்ட வெற்றி அது! ரா

புதிதினும் புதிது
ஆசி கந்தராஜா

போர் நொறுக்கிய இலங்கையின் வட பகுதியிலிருந்து ஊடகவியலாளனாக எழுத்துலகில் கால்பதித்த தெய்வீகன், அங்கு மூன்று தேசிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். இரண்டாயிரத்தின் ஆரம்ப காலப் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் தற்போது மெல்பேர்னில் மாதப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகச் செய

புதிதினும் புதிது
கருணாகரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் படித்துக்கொண்டிருக்கும் யதார்த்தனுக்குப் புனைவிலும் மரபு, தொன்மங்களிலும் பெருத்த ஈடுபாடுண்டு. இது தொடர்பான களப்பணிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைப்போல, இயற்கை மீதும் அளவற்ற பிடிப்புண்டு. யுத்தமும் அது உண்டாக்கிய அனுபவங்களும் ய

புதிதினும் புதிது
அனார்

இலங்கையின் கிழக்குமாகாணம். 2012இல் அவரது ‘இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய்’ எனும் முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. சூஃபிக் கவிதைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலும் தனது எழுத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார் (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ண

புதிதினும் புதிது
அனார்

இலங்கையின் சரித்திரத் தொன்மைவாய்ந்த கண்டியின் அக் குறணையில் வாழ்ந்துவருபவர். 2013ஆம் ஆண்டிலிருந்து முகநூலில் பத்தி எழுத்துகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எனத் தொடராக எழுதி, தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தினை உருவாக்கிக்கொண்டவர். பன்முகப்பட்ட போக்குகளைக்கொண்ட இஸ்லாமிய பண்பாட்டு, சிந்தனை மரபுகளை ஒற

புதிதினும் புதிது
கருணாகரன்

எழுத்து, உரையாடல், சமூகச் செயற்பாடு என மூன்று தளங்களில் சமாந்தரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கிரிஷாந், இலங்கையின் இளைய தலைமுறையினரில் குறிப்பிடத்தக்கதோர் அடையாளம். ‘மயான காண்டம் - பிந்திய பதிப்பு’ என்ற புதிய தலைமுறையின் கவிதைத் தொகுதியில் கிரிஷாந்தின் கவிதைகள் வெளியாகிக் கவனத்தைக்

உள்ளடக்கம்