வெற்றியும் விளைவும்
[தேர்தல் 2021 – கேரளம்]
வெற்றியும் விளைவும்
சுகுமாரன்
பிற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பொதுவாகக் கேரளத்தில் நடைபெறும் தேர்தல் முடிவுகள் அளிப்பதில்லை. இங்கே இரண்டு முன்னணிகள் போட்டியிடுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும். இவையே மாறிமாறி வெற்றியடைந்து ஆட்சியமைக்கின்றன. ஓர் அணியின் ஆட்சி தொடங்கும்போதே அடுத்தது எதிரணியின் ஆட்சி என்பது சொல்லாமலே விளங்கிவிடும். அரசியல்வாதிகளின் செயல்திட்டங்களும் மக்களின் பொது