
வழுவழுப்பான கல்
கவிதைகள்
ஜீவன் பென்னி
Courtesy: Robert broekhuis
வழுவழுப்பான கல் - 1
இந்த அமைதியை ஒரு சமவெளியிலிருந்து எடுத்துவந்து
பத்திரப்படுத்தியிருந்தோம்.
பிறகு
தங்க மீன்கள் சுற்றிவரும் தொட்டியில் போட்டுவைத்தோம்.
*
இந்தத் தனிமையை ஒரு நீளமான நதியிலிருந்து எடுத்து வந்து
காயவைத்திருந்தோம்.
பிறகு
வரவேற்பறை அலமாரியில் விளக்கொளிக்குக் கீழே வைத்தோம்.
*
இந்தப் பிரியத்தை ஒரு பாறையிலிருந்து எடுத்துவந்து
குளிரவைத்திருந்தோம்.
பிறகு
விருப்