தோட்டத்தின் அந்தம்
தோட்டத்தின் அந்தம்
கதை
மைக்கேல் அய்வாஸ்
தமிழில்: எத்திராஜ் அகிலன்
அந்த இடத்தைக் கடக்கும்போது தரைத்தள சாளரத்திலிருந்து உதவி கோரி ஒரு பரிதாபக் குரல் கேட்டது. உடனடியாகச் சாளரத்தின் விளிம்பைப் பற்றித் தத்தித்தாவி அந்த அறைக்குள் குதித்தேன். கனமான கருப்புநிற அறைகலன்கள் நிறைந்த ஓர் அறைக்குள் வந்திருந்தேன். குஞ்சம்வைத்துத் தைத்த உறைகளும் சிறுசிறு பல்வண்ண மெத்தைகளும் மலையெனக் கிடந்தன. நேப்பில்ஸ் விரிகுடாவின் அடர்நிற ஓவியம் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த இருவருக்கான அகண்ட படுக்கைக்கு அடியில் ஏதோவொரு மற்போர் நடந்து