இரும்புக் கோட்டையைத் தாக்கும் இந்துத்துவ ஈட்டி
இரும்புக் கோட்டையைத் தாக்கும் இந்துத்துவ ஈட்டி
கட்டுரை
ராமு மணிவண்ணன்
தமிழகத்தில் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் வியூகங்கள் நெடுங்காலமாக அதனை உள்ளே நுழைய விடாத மாநிலமான தமிழ்நாட்டில் அசாதாரணமான அரசியல் அழுத்தம் தந்து மாநில அரசியலில் தீவிர தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுடன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிசாரா சமூக-அரசியல் அமைப்புகள் கூட்டாகக் காண்பிக்கும் எதிர்ப்புக்கும் பாஜகவுக்கும் இடையிலான சமூக, கருத்தியல், அரசியல் சார்ந்த போருக்கான களங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்த வலுவான அழுத்தம் தொடங்கியிருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் இந்துத்துவச் சக்