தேசியக் கல்விக் கொள்கை 2020 வேரில் ஊற்றிய வெந்நீர்
கட்டுரை
தேசியக் கல்விக் கொள்கை 2020
வேரில் ஊற்றிய வெந்நீர்
அருணா ரத்னம்
தேசியக்கல்விக் கொள்கை 2020 பற்றிய பிரமதரின் உரையைக் கேட்டு, முகநூலிலும் டுவிட்டரிலும் வரும் எதிர்வினைகனைப் பார்த்தபின் ஆவணத்தைப் படித்தால் கல்வித்துறையில் பணியாற்றும் என்னைப் போன்ற பலருக்கும் ஏமாற்றமும் மனஉளைச்சலுமே மேலிடுகின்றன. பல விவரங்கள் கடந்த இருபது வருடங்களில் வெளியான தேசிய ஆவணங்களில் இருந்தவைதாம். முற்போக்காளர்களும் குழந்தை மையக் கல்வியாளர்களும் பேசிவந்த, பரிந்துரைக்கின்ற பல கருத்துகளை இந்த ஆவணமும் முன்வைக்கிறது