எங்கே இருக்கிறான் அந்த ராமன்?
கட்டுரை
எங்கே இருக்கிறான் அந்த ராமன்?
டி.எம். கிருஷ்ணா
ராமன் என் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனது குழந்தைப் பருவத்தில் பாட்டி ராமனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பிறகு ராஜாஜியின் ராமாயணம் நூலின் மூலமும் அமர் சித்ர கதைப் புத்தகங்கள் மூலமும் ராமனை அறிந்தேன். வால்மீகி ராமாயணச் சொற்பொழிவுகள், ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடர், அனைவரையும் அரவணைக்கும் ரகுபதி ராகவ ராஜாராம் பஜனைப் பாடல் ஆகியவை ராமபிரானை என் மனத்தில் அழுத்தமாகப் பதியவைத்திருக்கின்றன. ராமன் எங்கே என்று தேட வேண்டிய அவசியமே எனக்கு ஏற்பட்டதில்லை.
ஆனால் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ராமனை நான் தேடினேன். அய