அமெரிக்காவின் தீண்டத்தகாதவர்கள் சாதியமைப்பின் கமுக்கமான சக்தி
கட்டுரை
அமெரிக்காவின் தீண்டத்தகாதவர்கள் சாதியமைப்பின் கமுக்கமான சக்தி
இஸபெல் வில்க்கர்சன்
1950ஆம் ஆண்டு. குளிர் பருவம். ரோஸா பார்க்ஸ்1 கைதானதைத் தொடர்ந்து நடந்த மாண்ட்கோமரி நகர்ப்புற பேருந்துப் புறக்கணிப்பிற்குப் பிறகு, வழக்குகளையும் வெற்றிகளையும் எதிர்கொள்வதற்கு முன்பாக, மார்டின் லூதர் கிங்கும் அவருடைய மனைவி கொரெட்டாவும் புதுடில்லியிலுள்ள பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். அகிம்சை வழிப் போராட்டத்தின் தந்தையான காந்தியின் தேசத்தைத் தரிசிக்க அவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்திறங்கியவுடன், மாலைகள் கழுத்தை நிறைத்தன. நிருபர்களிடம், “பிற நாடுகளுக்கு நான் ஒரு சுற்றுலாப் பயணியாகவே சென்று வந