அடங்காத் தேடலின் குறியீடு
அஞ்சலி: கோவை ஞானி (1935 – 2020)
அடங்காத் தேடலின் குறியீடு
க. பஞ்சாங்கம்
Courtesy: Kovai Gnai.org
1980களில் மணிக்கொடி பொன்விழா மயிலாப்பூரில் ஓர் உள் அரங்கில் நடந்தது; புதுச்சேரியிலிருந்து நானும் போயிருந்தேன். அந்த விழாவில் இன்றும் மறக்காமல் நினைவில் இருப்பவை இரண்டே இரண்டுதான். ஒன்று, கோவை ஞானியைச் சந்தித்து உரையாடியது; புதிதாக ஓர் ஆள் பழகக் கிடைத்துவிட்டதைப் போலப் பெரிதும் என்னைப் பொருட்படுத்திப் பழகுவதாக உணர்ந்தேன். அந்த முதல் சந்திப்பிலேயே என்னைக் குறித்த முழு விவரத்தையும் (சாதி உட்பட) திரட்டுவதில் அவருடை